வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

500 பேருடன் காஷ்மீரில் மையம் கொண்டுள்ள லோகேஷ்.. பிரம்மாண்டத்தில் ஷங்கரையே மிஞ்சிடுவார் போல!

பிரம்மாண்டம் என்றாலே நமக்கு உடனே நினைவுக்கு வருவது ஷங்கர் மற்றும் ராஜமௌலி தான். ஏனென்றால் படத்தை தத்ரூபமாக காட்ட வேண்டும் என்பதற்காக மெனக்கெட்டு பல விஷயங்களை செய்வார்கள். இதற்காக பல கோடிகளும் செலவாகும். இப்போது லோகேஷும் அதையே பின்பற்றி வருகிறார்.

அதாவது விஜய் உடன் மீண்டும் இணைந்துள்ள லோகேஷ் லியோ படத்தை எடுத்து வருகிறார். இவருடைய படத்திற்கு என்று சில ஃபார்முலாக்களை உருவாக்கி வைத்துள்ளார். அதையும் தாண்டி லியோ படத்தில் பலவற்றை லோகேஷ் செய்து வருகிறாராம். அதாவது லியோ படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது.

Also Read : லோகேஷ் யுனிவர்சில் ரஜினி இணைய வாய்ப்பே இல்லையாம்.. இந்த ஒன்றை காரணம் காட்டி கழட்டி விட்ட சம்பவம்

ஆகையால் தமிழ்நாட்டை தாண்டி படப்பிடிப்பு நடத்துவதால் அந்த மாநிலத்தில் உள்ளவர்களை வைத்து படம் எடுத்தால் செலவை மிச்சப்படுத்தலாம். ஆனால் லோகேஷ் கனகராஜ் 500க்கும் மேற்பட்ட தமிழ் ஆட்களை அங்கு அழைத்துச் சென்றுள்ளாராம். ஏனென்றால் பார்ப்பதற்கு தத்ரூபமாக காட்ட வேண்டும், என்பதாலும் தமிழ் முகங்களாக இருக்க வேண்டும் என்று இவ்வாறு செய்துள்ளார்.

மேலும் படத்தில் இவையெல்லாம் எதார்த்தமாக இருக்கும் என்பதற்காக லோகேஷ் இவ்வாறு செய்து உள்ளார். இதனால் செலவை பற்றி எல்லாம் கவலைப்படாமல் பிரம்மாண்டமாக எடுத்து வருகிறார். தயாரிப்பாளரும் லோகேஷ் மீதுள்ள நம்பிக்கையால் இந்த விஷயத்தில் கண்டு கொள்ளவில்லையாம்.

Also Read : வெறும் பெயரை வைத்து மட்டுமே விளையாடும் லோகேஷ்.. லியோ படத்திலிருந்து வெளிவந்த ரகசியம்

பொதுவாக ஷங்கர் தவிர மற்ற இயக்குனர்கள் இவ்வளவு செலவு செய்து பணத்தை தத்ரூபமாக காட்ட முன் வர மாட்டார்கள். ஏனென்றால் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அவர்களுக்கு நெருக்கடி வரும். ஆனால் இப்போது ஷங்கர் மிஞ்சும் அளவிற்கு லோகேஷ் லியோ படத்திற்காக மெனக்கெட்டு வருகிறார்.

கண்டிப்பாக அதற்கு கை மேல் பலன் வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் லியோ படம் வெளியாவதற்கு முன்பே 400 கோடியை தாண்டி விற்பனை ஆகி உள்ளது. அதுமட்டுமின்றி படம் வெளியான பிறகு இந்திய அளவில் ஆயிரம் கோடி வசூலை தாண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Also Read : டைட்டில வச்சே பல நூறு கோடி கல்லா கட்டிய லோகேஷின் லியோ.. இந்திய அளவில் எதிர்பார்க்கும் மொத்த வசூல்

Trending News