வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

லியோ, தலைவர் 171-க்கு நடுவில் சம்பவம் செய்ய போகும் லோகேஷ்.. கூட்டணி போடும் அனிருத்

Lokesh-Aniruth: சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் அலப்பறை எல்லாம் இப்போது ஓய்ந்த நிலையில் அடுத்ததாக லியோ படத்திற்கான எதிர்பார்ப்பு தான் உச்ச கட்டத்தில் இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் ஏராளமான நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் படம் அடுத்த மாதம் திரையரங்குகளை அலங்கரிக்க இருக்கிறது.

அதற்கான ப்ரமோஷன் வேலைகள் அனைத்தும் இப்போது தீவிரமாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ், ரஜினி இணையும் தலைவர் 171 பட அறிவிப்பும் சமீபத்தில் வெளிவந்தது.

Also read: லோகேஷ், ரஜினி படத்திற்கு எதிராக தயாராகும் தரமான படம்.. சன் பிக்சர்ஸ் செய்த துரோகத்தால் ஏற்பட்ட விளைவு

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ரசிகர்கள் தற்போது ஆரவாரத்துடன் இதை கொண்டாடி வருகின்றனர். இப்படி அடுத்தடுத்து பிஸியாகி வரும் லோகேஷ் நடிப்பு பக்கமும் தன் கவனத்தை திருப்பி இருக்கிறார். ஏற்கனவே இது பற்றி செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் தான் இவர் நடிக்க இருக்கிறாராம்.

ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பு அறிவு இயக்கும் இப்படத்தில் அனிருத்தும் நடிக்க உள்ளார். இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் அனைத்தும் தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி அக்டோபர் மாத இறுதி அல்லது நவம்பர் மாத தொடக்கத்தில் இதன் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட இருக்கிறது.

Also read: ஜவான், லியோவால் பீதியில் 30 பட தயாரிப்பாளர்கள்.. மார்க் ஆண்டனி முதல் சந்திரமுகி 2 வரை தலை தப்புமா.?

தற்போது லியோ வெளியீட்டில் பிஸியாக இருக்கும் லோகேஷ் தலைவர் 171 வேலையை ஆரம்பிப்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இப்படத்தை முடித்துக் கொடுத்துவிடும் பிளானில் இருக்கிறாராம். ஆக மொத்தம் இந்த இரு படங்களுக்கும் நடுவில் தரமான சம்பவம் ஒன்றை அவர் நிகழ்த்த இருக்கிறார்.

சமீப காலமாக இயக்குனர்கள் எல்லாம் நடிப்பு பக்கம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு நானும் ஒரு விதிவிலக்கல்ல என்பது போல் லோகேஷும் களமிறங்கி இருப்பது ஆச்சரியமாக இருந்தாலும் ஆர்வத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த செய்தி சோசியல் மீடியாவில் படுவேகமாக பரவி வருகிறது.

Also read: ஷங்கர் பேச்சை கேட்காமல் போன ரஜினி.. ராங் ரூட்டில் சிக்கி விழி பிதுங்கிய சம்பவம்

Trending News