வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரஜினி, கமலை டீலில் விட்ட லோகேஷ்.. இரண்டாம் பாகத்துடன் களமிறங்கும் அடுத்த கூட்டணி

Director Lokesh Kanagaraj: தற்போது இருக்கும் இயக்குனர்களை காட்டிலும், லோகேஷ் கனகராஜின் படங்களில் நடிக்கவே ஆர்வம் காட்டுகின்றனர் பிரபலங்கள். அவ்வாறு தன் படங்களை இயக்குவதற்கு பக்காவாய் பிளான் போட்டு செயல்பட்டு வருகிறார் லோகேஷ்.

கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் தான் லோகேஷ் கனகராஜ். அதிலும் குறிப்பாக சமீபத்தில் வெளியாகிய விக்ரம் படத்தில் இவரின் இயக்கம் ஹாலிவுட் ரேஞ்சிற்கு அமைந்து மாபெரும் வரவேற்பை பெற்றது.

Also Read: முழுசாய் சொதப்பிய அட்லீ.. ஜெராக்ஸ் போல் அப்படியே ஷாருக்கானை வைத்து விளையாடிய சின்ன தம்பி

இதைத்தொடர்ந்து திரை பிரபலங்கள் இவரின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கவும் தொடங்கி விட்டனர். அது மட்டுமல்லாமல் பாலிவுட் இயக்குனர்களும் வியக்கும் அளவிற்கு இவரின் படைப்பு பெரிதாக பேசப்பட்டது.

அதைத்தொடர்ந்து ரஜினி, கமல் படங்களை கையில் வைத்துக் கொண்டு தன் லிஸ்ட்டை நீட்டிக் கொண்டே போகிறார் லோகேஷ் கனகராஜ். அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி இருக்கும் இவர் ரொம்ப சிம்பிளாக முடிக்க திட்டம் போட்டு வருகிறார்.

Also Read: யோகி பாபுவுக்கு போட்டியாக களம் இறங்கிய புகழ்.. ஹாலிவுட் பட ஸ்டைலில் வெளிவந்த போஸ்டர்

தற்பொழுது லியோ படத்தை முடித்துள்ள இவர் மேற்கொண்டு தன் ஆர்வத்தை கைதி 2 படத்தின் மேல் வைத்து வருகிறார். கைதி பாகம் ஒன்றின் வரவேற்பை தொடர்ந்து பாகம் 2 சிறப்பாக அமைய திட்டம் தீட்டி வருகிறார். அதுவும் குறுகிய காலத்தில் இப்படத்தை எளிதில் முடித்து வீட்டு அடுத்த படத்தை தொடங்க முடிவெடுத்துள்ளாராம்.

அதற்காக வெறும் இரண்டு மணி நேரத்திற்கு கிட்டத்தட்ட 30 நாட்கள் கால்ஷீட் போதும் என முடிவு எடுத்திருக்கிறார். அதிலும் கொஞ்சம் சிரமப்பட்டால் 25 நாட்களிலேயே முடித்து விடலாம் எனவும் பக்காவாய் காய் நகர்த்தி வருகிறார். இவரின் இயக்கம் போன்றே இவரின் மன தைரியமும் சினிமா வட்டாரங்கள் இடையே பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

Also Read: ட்ரெய்லர் ஓட மாயமாக மறைந்து போன 5 படங்கள்.. சந்தானத்திற்கு கை கொடுக்காத சர்வர் சுந்தரம்

Trending News