Rajini: ரஜினியின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும் விதமாக லோகேஷ் உடன் கூட்டணி வைத்து கூலி படத்தில் நடித்து வருகிறார். இதற்கு இடையில் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பையும் வெற்றிகரமாக ரஜினி முடித்து விட்டார். அந்த வகையில் ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் இரண்டு படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.
சமீபத்தில் கூலி படத்தின் டீசர் வெளியானது. இதை பார்க்கும் பொழுது பழைய படங்களான தீ மற்றும் உழைப்பாளி போன்ற படங்களை ஞாபகப்படுத்துகிறது. அத்துடன் லோகேஷ் ஸ்டைலில் பழைய படங்களில் இருந்து வசனங்கள் மற்றும் பாடல்களும் இடம்பெற்றிருக்கிறது. மேலும் அனிருத் பின்னணி இசையில் டிஸ்கோ பாடல் அடி தூள் கிளப்பிவிட்டது.
பகையை தீர்க்க மூளையை பயன்படுத்திய லோகேஷ்
அந்த வகையில் கமலுக்கு எப்படி ஒரு விக்ரம் படத்தை கொடுத்து ஆரம்பிக்கலாமா என்று சொல்லிய வசனத்துடன், கூலி படத்தில் சூப்பர் ஸ்டார் முடிச்சிடலாமா என்று சொல்லும் மந்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டிருக்கிறது. அத்துடன் லோகேஷ் எப்போதுமே அவருடைய படத்தில் எதையாவது ஒரு சகாப்தத்தை ஏற்படுத்தும் வகையில் முக்கியமான கேரக்டரை கொண்டு வருவார்.
அதே மாதிரி கூலி படத்தில் ரஜினியின் நண்பராக சத்யராஜிடம் பேசி ஒப்புதல் வாங்கி இருக்கிறார். கிட்டத்தட்ட ரஜினிக்கும் சத்யராஜுக்கும் 38 வருடங்களாக பகை இருந்த விஷயம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்தப் பகையை தீர்த்து வைக்கும் விதமாக லோகேஷ் களத்தில் இறங்கி இருக்கிறார்.
அதாவது தம்பிக்கு எந்த ஊரு படப்பிடிப்பின் போது வாலிப வயதில் ரஜினி, சத்யராஜை கேலி, கிண்டல் பண்ணி நடிகைகள் முன்னாடி அவமானப்படுத்திருக்கிறார். அத்துடன் மிஸ்டர் பாரத் என்ற படத்தில் சத்யராஜ் நடித்த பல காட்சிகள் கட் பண்ணியதற்கு காரணம் ரஜினி தான் என்று சத்யராஜ் அவர் மீது கோபப்பட்டு இருக்கிறார். சத்யராஜுக்கு வரிசை கட்டி நிற்கும் 4 படங்கள்
கூலி
சிக்காந்தர்
வள்ளி மயில்
ஜாக்சன் துரை 2
இந்த கோபங்களை வெளிக்காட்டும் விதமாக சத்யராஜ் காவிரி தண்ணீர் பிரச்சனையில் பேசிய பொழுது மற்றும் ரஜினி அரசியலில் சேர்ந்த பொழுது நேரடியாக தாக்கி பேசியிருந்தார். இப்படி தொடர்ந்து இவர்களுடைய பகை வளர்ந்து கொண்டு வந்த நிலையில் இதை லோகேஷ் கூலி படத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைப்பதற்காக இருவரையும் நண்பர்களாக கோர்த்து விட்டிருக்கிறார்.
என்ன தான் ஒரு பக்கம் ரஜினி மீது பகை இருந்தாலும் தொழில் என்று வந்து விட்டால் அதற்கு நான் விசுவாசமாகத்தான் நான் இருப்பேன் என்று லோகேஷ் கேட்டதும் சத்யராஜ் நடிப்பதற்கு ஓகே கொடுத்து விட்டார். இப்படத்தை தொடர்ந்து சத்யராஜ், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகும் சிக்காந்தர் படத்தில் வில்லன் கேரக்டரில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து இயக்குனர் சுசேந்திரன் இயக்கத்தில் வள்ளி மயில் படத்திலும், ஜாக்சன் துரை 2 போற்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். ஹீரோவாக நடிக்கும் காலத்தில் சத்யராஜ் இருந்த வேகத்தை விட தற்போது கதையின் நாயகனாக நடிக்கும் பொழுது டபுள் மடங்காக உத்வேகமாக நடித்து வருகிறார்.