Director Lokesh Kanagaraj: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஆடியோ லான்ச் இந்த மாதம் கடைசியில் சென்னையில் நடைபெறவுள்ள நிலையில்,அக்டோபர் 19 ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனிடையே லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் ப்ரோமோஷன் வேளைகளில் ஆயத்தமாகி வருகிறார்.
மேலும் லியோ படத்தில் நடித்துள்ள மற்ற பிரபலங்களான திரிஷா, மிஸ்கின், மன்சூர் அலிகான்,சஞ்சய் தத் உள்ளிட்டோரின் அனுபவங்களை பற்றி தெரிந்துக் கொள்ளவும் ஆர்வமாக உள்ளனர். அந்த வகையில் லியோ படம் ரிலீசானவுடன் நடிகர் விஜய், தளபதி 68 படத்தில் நடிக்க ஆயத்தமாக உள்ள நிலையில், லோகேஷ் கனகராஜும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தையும் இயக்க உள்ளார்.
Also Read: ஜெயிலர் வசூலை லியோ முறியடிக்க கூடாது.. தந்திரமாய் காய் நகர்த்தும் ரெட் ஜெயண்ட் உதயநிதி
ஆனால் இப்படம் ஆரம்பிப்பதற்கு முன்னாள் ரஜினிகாந்த் தனது தலைவர் 170 படத்தில் நடக்க உள்ள நிலையில், தலைவர் 171 படத்தை அடுத்தாண்டு பிப்ரவரியில் தான் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட உள்ளது. இதனிடையே லோகேஷ் கனகாரஜ் இந்த நேரத்தை பயன்படுத்தி இசையமைப்பாளர் அனிரூத்துடன் இணைந்து அன்பறிவு படத்தில் நடிக்க ஆயத்தமாகியுள்ளார்.
இப்படம் தான் லோகேஷ் கனகாரஜ் மற்றும் அனிருத் நடிக்கும் முதல் படம் என்பதால் ரசிகர்கள் இவர்களது நடிப்பை பார்க்க ஆவலுடன் உள்ளனர். இதனிடையே அதுவரைக்கும் தன்னுடன் வேலை பார்த்த உதவி இயக்குனர்களை ரிலாக்ஸ் செய்ய லோகேஷ் கனகராஜ் புது விஷயத்தை செய்துள்ளார். இவர் செய்த மாதிரி வேறு எந்த இயக்குனர்களும் அவர்களது உதவி இயக்குனர்களுக்கு இதுவரை செய்ததே கிடையாது.
Also Read: லியோ சென்சாரில் தப்பித்தாலும் அவன்ட உங்க பருப்பு வேகாது.. தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட லோகேஷ்
அந்த அளவுக்கு லோகேஷ் கனகராஜ் தனது உதவி இயக்குனர்களை தங்க தட்டில் வைத்து தாங்கும் அளவுக்கு ஒரு செயலை செய்துள்ளார். கிட்டத்தட்ட 40 லட்சம் ரூபாய் செலவு செய்து தனது உதவி இயக்குனர்கள் அதனை பேரையும் வெளிநாடு அனுப்பி ரிலாக்ஸ் செய்து வருமாறு கூறியுள்ளாராம். ஏனென்றால் விஜய்யின் லியோ படத்தின் படப்பிடிப்பின் முதல் கட்டமாக காஷ்மீரில் நடைபெற்ற சமயத்தில், மைனஸ் குளிரிலும் உதவி இயக்குனர்கள் ரத்தம் உறைய இரவு பகல் பார்க்காமல் வெளி செய்தனர்.
இது குறித்த வீடியோவும் இணையத்தில் வெளியான நிலையில், பார்க்கும் நம் அனைவரது கண்களும் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் மூழ்கியது. அந்த அளவுக்கு லியோ படத்துக்காக தங்களது முழு கடின உழைப்பையும் கொடுத்த தனது உதவி இயக்குனர்கள் மற்றும் புரொடக்சன் மேனேஜர்களை லோகேஷ் தனது சொந்த செலவில் அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்ப உள்ளார். இதுபோன்று ராஜமௌலி கூட தனது உதவி இயக்குனர்களுக்கு இதுபோன்ற செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: லியோ படத்துக்கு வச்ச பெரிய ஆப்பு.. வசூலை தடுக்க நாலா பக்கமும் நடக்கும் சதி