திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

1000 கோடி வசூலில் இணையுமா லியோ? தயாரிப்பாளர் தலையில் இடியை இறக்கியது போல் பதிலை சொன்ன லோகேஷ்

Director Lokesh: லோகேஷ் படத்தை இயக்குகிறார் என்று சொன்னால் போதும் கோடிக்கணக்கில் பணத்தை கொட்ட தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்பார்கள். ஏனென்றால் அவரது படம் எப்படியுமே போட்ட பட்ஜெட்டை காட்டிலும் பல மடங்கு வசூலை அள்ளிவிடும். அந்த வகையில் லோகேஷின் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் 500 கோடியை தாண்டி வசூல் செய்தது.

இந்த சூழலில் மாஸ்டர் படத்திற்கு பிறகு லியோ படத்தில் விஜய்யுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் பின்னணி வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது. மேலும் வருகின்ற செப்டம்பர் மாதம் பிரம்மாண்டமாக லியோ படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற இருக்கிறது.

Also Read : வங்கி வேலையை விட இதுதான் காரணமாம்.. வித்தியாசமாக மனுஷன் என நிரூபித்த லோகேஷ்

அதுமட்டுமின்றி அக்டோபர் 19ஆம் தேதி லியோ படம் ரிலீஸ் ஆகிறது. சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு லோகேஷ் பதிலளித்து வந்தார். அதில் லியோ படத்திற்கு பிறகு வேறு ஒரு படத்தை லோகேஷ் இயக்க இருக்கிறாராம். அதன் பிறகு தான் கைதி 2 படம் உருவாக இருக்கிறது என்று கூறினார்.

இந்நிலையில் லியோ படம் ஃப்ரீ பிசினஸில் பட்டையை கிளப்பியது. ஆகையால் எப்படியும் விக்ரமைத் தாண்டி அதாவது ஆயிரம் கோடி வசூல் செய்யும் என்ற பேச்சு போய்க் கொண்டிருக்கிறது. இது குறித்து லோகேஷ் இடம் கேட்கும் போது தயாரிப்பாளர் தலையில் இடியை இறக்கும்படியான ஒரு பதிலை கொடுத்திருக்கிறார்.

Also Read : சிங்கமும், சிறுத்தையும் ஒரே படத்திலா?. 10 படத்துக்குள்ள மொத்த ஹீரோவும் லாக் செய்யும் லோகேஷ்

அதாவது லியோ படம் ஆயிரம் கோடி வசூல் என்றெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு தேவை என்னுடைய படத்தை நம்பி 150 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கும் ரசிகர்கள் தான். ஒரு படம் எடுப்பதற்கான நோக்கம் ரசிகர்களை என்டர்டைன்மென்ட் செய்வதற்கு தான். அதற்காக மட்டுமே தான் நான் படங்களை எடுத்து வருகிறேன்.

மேலும் 10வது படம் தான் என்னுடைய கடைசி படம். அதன் பிறகு என்னைப் போல வேறு ஒரு இயக்குனர் ரசிகர்களை என்டர்டைன்மென்ட் செய்வதற்கு கண்டிப்பாக வருவார். ஆகையால் ரசிகர்களை திருப்திபடுத்த வேண்டும் என்பதுதான் இயக்குனர்களின் கடமை என்ற லோகேஷ் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்.

Also Read : அடுத்த ஹீரோவை உறுதி செய்த லோகேஷ்.. பிரம்மாண்ட தயாரிப்பாளர் கூட்டணியில் வெளிவர உள்ள அப்டேட்

Trending News