ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

முதலாளியாக வெற்றி பெறுவாரா லோகேஷ்.? வெளிவந்த ஃபைட் கிளப் ப்ரிவ்யூ ஷோ ட்விட்டர் விமர்சனம்

Fight Club Preview Show Twitter Review: லோகேஷ் இப்போது முதலாளியாக அவதாரம் எடுத்திருக்கிறார். உறியடி விஜய்குமார் நடிப்பில் ஜி ஸ்குவாட் வழங்கும் ஃபைட் கிளப் வரும் 15ஆம் தேதி வெளிவர இருக்கிறது.

fight-club
fight-club

அப்பாஸ் ஏ ரஹமத் இயக்கியுள்ள இப்படத்தின் ப்ரிவ்யூ ஷோ இன்று நடைபெற்றுள்ளது. 2 மணி நேரம் 17 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்திற்கு ஏ சர்டிபிகேட் கிடைத்துள்ளது. இது எதிர்பார்த்தது தான். ஏனென்றால் லோகேஷின் படம் என்றாலே வெட்டு, குத்து, ரத்தத்துக்கு பஞ்சம் இருக்காது.

fight club-review
fight club-review

Also read:

அப்படி வழக்கமான லோகேஷின் ஃபார்முலாவுடன் வேற லெவலில் இருக்கும் இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் தான் குவிந்து கொண்டிருக்கிறது. அதன்படி முதல் பாதி பல எதிர்பார்ப்புகளை முன்வைக்கிறது. வழக்கமான வடசென்னை படமாக இருந்தாலும் அதை காட்சிப்படுத்தி இருக்கும் விதம் வித்தியாசமாக இருக்கிறது.

fight club
fight club

மேலும் ஆக்சன், இசை, ஹீரோவின் நடிப்பு என இதுவரை பார்க்காத ஒன்றை காட்டி இரண்டாம் பாதிக்கான ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. அது மட்டுமின்றி இடைவேளை காட்சியும் விஷுவல் ட்ரீட்டாக அமைந்திருக்கிறது. அதேபோன்று இரண்டாம் பாகமும் ஃபயராக நகர்கிறது.

Also read:

வன்முறை காட்சிகள் கொஞ்சம் அதிகப்படியாக இருந்தாலும் லோகேஷ் தயாரிப்பாளராக கல்லா கட்டுவார் என்பதில் சந்தேகம் இல்லை.ஆக மொத்தம் ஆரம்பமே அட்டகாசம் என்ற கதையாக லோகேஷ் தயாரிப்பாளராக வெற்றியை நோக்கி முதல் படியை எடுத்து வைத்திருக்கிறார்.

review-fight club
review-fight club

அதே போன்று இனி விஜய்குமாரும் பிசியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இப்படியாக படத்தைப் பார்த்த சினிமா விமர்சகர்கள் ஆகா ஓகோ என புகழ்ந்து வருவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.

fight-club-review
fight-club-review

Trending News