திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

யாரு செத்தாலும் இந்த சண்டை மட்டும் சாவாது.. சம்பவத்திற்கு தயாராகும் லோகேஷின் Fight Club டீசர்

Fight Club Movie Teaser: ஒரு இயக்குனராக சர்வதேச அளவில் திரும்பிப் பார்க்க வைத்த லோகேஷ் இப்போது முதலாளியாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். சமீபத்தில் அவர் தன்னுடைய தயாரிப்பு நிறுவன அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதை தொடர்ந்து ஜி ஸ்குவாட் தயாரிக்கும் ஃபைட் கிளப் டைட்டில் போஸ்டரும் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி முடித்த லோகேஷ் தற்போது டீசரையும் வெளியிட்டுள்ளார். இப்படி பரபரப்பாக வேலையை ஆரம்பித்துள்ள இவருடைய அதிரடி ரசிகர்களையும் குஷிப்படுத்தியுள்ளது. அந்த வகையில் உறியடி பட இயக்குனரும், நடிகருமான விஜயகுமாரின் ஆக்சன் சம்பவமாக இந்த டீசர் இருக்கிறது.

Also read: சூட்டோடு சூடாக லோகேஷ் வெளியிட்ட அப்டேட்.. டைட்டிலுடன் வெளியான மிரட்டல் போஸ்டர்

இதன் ஆரம்பத்திலேயே நான் பிறப்பதற்கு முன்னாடியே இந்த சண்டை நடந்துகிட்டு தான் இருக்கு. யாரு செத்தாலும் இந்த சண்டை மட்டும் சாவாது என்ற குரலோடு தொடங்குகிறது. அதை தொடர்ந்து வெட்டு, குத்து, சண்டை என லோகேஷின் வழக்கமான ஃபார்முலா காட்டப்படுகிறது.

இரு கோஷ்டிகளுக்கு நடுவே நடக்கும் சண்டையும், பகையும் தான் கதைக்களம் என்பது வீடியோவை பார்க்கும் போதே தெரிகிறது. அதில் கல்லூரியில் படிக்கும் ஹீரோவின் காதல், நண்பர்களின் கலாட்டா, ஆக்சன் என டீசர் முழுவதும் பரபரப்பாகவே இருக்கிறது.

Also read: முக்கிய நாளை குறி வைக்கும் ஐஸ்வர்யா, லோகேஷ்.. சிக்காமல் ஓடி ஒளியும் சூப்பர் ஸ்டாரின் ஃபிளாஷ்பேக்

இப்படியாக வெளிவந்திருக்கும் இந்த வீடியோவில் கமலின் பழைய விக்ரம் படத்தில் வரும் என் ஜோடி மஞ்ச குருவி என்ற பாடலின் பிஜிஎம் ஒலிக்கிறது. பொதுவாக லோகேஷ் தன்னுடைய படத்தில் ஹிட்டடித்த 80ஸ் பாடல்களை வைத்து ட்ரெண்டாக்கி விடுவார்.

அந்த வகையில் இந்த பாடலும் இனிமேல் சோசியல் மீடியாவில் வைரலாகும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆக மொத்தம் பெரும் எதிர்பார்த்தை ஏற்படுத்தி இருக்கும் இந்த ஃபைட் கிளப் வரும் டிசம்பர் 15ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending News