வியாழக்கிழமை, மார்ச் 13, 2025

பாதியிலேயே நிறுத்தப்பட்ட லோகேஷின் படம்.. அப்செட்டில் இருக்கும் ஹீரோ

Lokesh Kanagaraj : மோஸ்ட் வான்டெட் இயக்குனராக வளம் வந்து கொண்டிருப்பவர்தான் லோகேஷ் கனகராஜ். இதுவரை தொடர்ந்து வெற்றி படங்களையே கொடுத்து வந்த இவர் விஜய்யின் லியோ படத்தில் மட்டும் சிறு தடுமாற்றத்தை சந்தித்தார்.

அடுத்ததாக ரஜினியின் கூலி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வருகிறது. ஆனால் எதிர்பாராத விதமாக லோகேஷின் மற்றொரு படம் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

அதாவது நடிகர்கள், இயக்குனர்கள் என பலரும் இப்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து வருகிறார்கள். அவ்வாறு லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நிலையில் ராகவா லாரன்ஸ் வைத்து பென்ஸ் படத்தை எடுத்து வந்தார்.

லோகேஷின் படம் பாதியிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது

பாக்யராஜ் கண்ணன் இந்த படத்தை இயக்கும் நிலையில் பென்ஸ் படத்தின் கதையை லோகேஷ் கனகராஜ் தான் எழுதியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பாதி சென்ற நிலையில் இப்போது நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

லோகேஷ் இடம் போதுமான பட்ஜெட் இல்லாத காரணத்தினால் படப்பிடிப்பை சிறிது காலம் தள்ளி வைத்துள்ளார். ராகவா லாரன்ஸ் கையில் இப்போது காஞ்சனா 4 மற்றும் காலபைரவா ஆகிய படங்கள் இருக்கிறது. ஆனாலும் பென்ஸ் படத்திற்கும் கால்ஷீட் கொடுத்து அதிலும் தீவிரமாக நடித்து வந்தார்.

இப்போது திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது அவரை அப்செட் ஆக்கியுள்ளது. கூலி படப்பிடிப்பு முடிந்த பிறகு தான் மீண்டும் பென்ஸ் படத்தை தொடங்குவார்கள் என கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.

அதுவரை லாரன்ஸ் காத்திருப்பாரா? இல்லை வேறு படங்களில் கமிட்டாகிவிட்டால் மீண்டும் பென்ஸ் படத்திற்கு கால்ஷீட் ஒதுக்குவது கஷ்டம். ஆகையால் என்ன செய்வது என்று தெரியாமல் லோகேஷ் இப்போது திணறி வருகிறார்.

Trending News