ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

சூப்பர் ஸ்டாரை குத்தி காட்டிய லோகேஷின் கூட்டாளி.. அனல் பறந்த லியோ சக்ஸஸ் மீட் மேடை

Leo Success Meet: நேற்று காலையில் இருந்தே மிகவும் பரபரப்பாக இருந்த சோசியல் மீடியா இப்போது லியோவால் அனல் பறந்து கொண்டிருக்கிறது. விஜய், லோகேஷ் கூட்டணியில் வெளிவந்த லியோ வசூலில் சக்கை போடு போட்டதை தொடர்ந்து தற்போது அதன் சக்சஸ் மீட் மிக பிரம்மாண்டமாக நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

ஏற்கனவே இசை வெளியீட்டு விழா நடைபெற இருந்து மிஸ் ஆனதில் மிகவும் அப்செட்டாக இருந்தனர். ஆனால் இப்போது அதற்கும் சேர்த்து இரட்டை திருவிழாவாக இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதிலும் மேடையில் விஜய் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் இப்போது ட்விட்டர் தளத்தை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் லோகேஷின் கூட்டாளியான ரத்னகுமார் லியோ மேடையில் கூறிய ஒரு விஷயம் தான் இப்போது பல சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது. அதாவது ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவின் போது தலைவர் காக்கா பருந்து கதையை கூறி ஒரு பிரச்சனைக்கு அடித்தளம் போட்டிருந்தார்.

Also read: விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி என்ன தெரியுமா?. பெருசாகி ஊதி கெடுக்கும் நெட்டிசன்கள்

அது சோசியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பிய நிலையில் விஜய் அதற்கு என்ன பதிலடி கொடுப்பார் என்ற ஆர்வம் தான் அதிகமாக இருந்தது. ஆனால் நா எதுக்கு இருக்கேன் எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் என்ற ரீதியில் ரத்னகுமார், எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் பசிச்சா கீழ வந்து தான் ஆகணும் என்று கூறியிருந்தார். இது நிச்சயம் ரஜினியை பற்றிய கருத்து தான் என்பது குழந்தைக்கு கூட தெரியும்.

அப்படி இருக்கும் போது ரசிகர்கள் இதை சும்மாவா விடுவார்கள். இப்போது ரத்னா பேசிய அந்த பேச்சு தான் வைரல் ஆகி வருகிறது. மேலும் சூப்பர் ஸ்டாரை குத்தி காட்டி வேண்டாததை பேசி அவர் பகையை மூட்டி விட்டதாகவும் ஒரு பேச்சு எழுந்துள்ளது. ஏனென்றால் லோகேஷ் அடுத்ததாக தலைவர் 171 படத்தை இயக்க இருப்பது தெரிந்த கதை தான்.

அப்படி இருக்கும் போது சொந்த நண்பனுக்கே ஆப்பு வைக்கும் வகையில் இப்படி ஒரு விஷயத்தை மேடையில் அவர் கொளுத்தி போட்டு இருப்பது பல விவாதங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது. அந்த வகையில் நேற்று விழாவில் நடந்த முக்கிய சம்பவங்களுள் ஒன்றாக இருக்கும் ரத்ன குமாரின் பேச்சு இப்போது பரப்பரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

Also read: லியோ சக்சஸ் மீட்டை வைத்தே பல கோடி சம்பாதித்த லலித்.. அம்பலமான உண்மை

Trending News