ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பாதியிலேயே கழட்டி விட்டு டாட்டா சொன்ன நயன்தாரா.. மொத்த பிளானையும் மாற்றிய லோகேஷ்

Nayanthara-Lokesh: நயன்தாரா இருக்கிற இடத்துல பஞ்சாயத்து இல்லைன்னா தான் ஆச்சர்யம். அப்படித்தான் இப்போது அவரால் லோகேஷ் போட்டு வைத்திருந்த மொத்த பிளானும் தலைகீழாக மாறி இருக்கிறது. ஆனால் அம்மணியோ கூலாக அவருக்கு டாட்டா சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பில் படு பிஸியாக இருக்கும் நயன்தாரா லோகேஷ் தயாரிப்பில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. அதுவும் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ஹாரர் படத்தில் அவர் நடிக்க சம்மதித்திருந்தார். இது ஆச்சரியமாக இருந்தாலும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது.

Also read: புலியை பார்த்து சூடு போட்ட பூனை.. கெத்து காட்டும் நயன்தாரா, அதல பாதாளத்திற்குச் சென்ற த்ரிஷா

ஆனால் இப்போது இந்த படத்தில் இருந்து நயன்தாரா பாதியிலேயே விலகி ஷாக் கொடுத்திருக்கிறார். இதுதான் இப்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு செய்தியாக மாறி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் படத்தை இயக்க இருந்த லோகேஷின் உதவியாளர் ரத்னகுமாரும் அதிலிருந்து வெளியேறி விட்டாராம்.

அதைத்தொடர்ந்து இப்போது அந்த கதையில் சில மாறுதல்கள் செய்யப்பட்டு மற்றொரு உதவி இயக்குனர் கையில் லோகேஷ் ஒப்படைத்து விட்டாராம். இப்படி திரும்பவும் முதலிலிருந்து அனைத்தும் மாற்றப்பட்ட நிலையில் ராகவா லாரன்ஸ் இதில் நடிப்பது மட்டும் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது.

Also read: எந்த ஹீரோவுமே வேண்டாம், தனி ஆளா கெத்து காட்டிய நயன்தாரா.. கோடியில் வசூலை குவித்த 4 படங்கள்

மேலும் இப்படத்தில் இருந்து விலகிய ரத்னகுமார் மற்றொரு அதிரடி ஆக்சன் நிறைந்த படத்தை இயக்குவதற்கு தயாராகி வருகிறாராம். அதையும் லோகேஷ் தான் தயாரிக்கிறார். இந்த இரண்டு படங்களுக்கான மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு இப்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அதில் நயன்தாரா நடிக்க இருந்த கேரக்டரில் முன்னணி நாயகி நடிப்பதற்கும் பேச்சு வார்த்தை ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கிறது. திரிஷாவே அதில் நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. விரைவில் இதற்கான அறிவிப்பும் வெளிவர இருக்கிறது. இதை தொடர்ந்து பாலிவுட் பக்கம் ஒரு படத்தை தயாரிக்கும் முடிவிலும் லோகேஷ் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: லோகேஷ், நெல்சன் தான் எனக்கு தெய்வம் மாதிரி தெரியுறாங்க.. பகிரங்கமாக ஒப்புக்கொண்ட லாரன்ஸ் மாஸ்டர்

Trending News