வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

திமிரு பட இயக்குனர் போல தப்பு செய்த லோகேஷின் வலது கை.. வாயை விட்டு புண்ணாக்கியதால் காணாமல் போயிடுவாரு

Lokesh: லோகேஷ் சமீபத்தில் இயக்கிய லியோ படம் வசூலை வாரி குவித்த நிலையில் இப்போது வெற்றி விழா நடத்தப்பட்டது. இதில் விஜய் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டிருந்தார். இந்த சூழலில் படத்தின் இயக்குனர் லோகேஷ் கூட நிறைய விஷயங்கள் பேசாத நிலையில் அவரது வலது கை சர்ச்சையான விஷயத்தை பேசி மாட்டியிருக்கிறார்.

அதாவது லோகேஷிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருபவர் ரத்தினகுமார். லியோ படத்தின் இரண்டாம் பாதியை இவர்தான் எடுத்தார் என்ற ஒரு பேச்சும் போய்க்கொண்டிருக்கிறது. இந்த சூழலில் விஜய்யை உச்சிக்குளிரா செய்ய வேண்டும் என்பதற்காக இப்படத்தின் வெற்றி விழாவில் ஏடாகூடமாக பேசி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

அதாவது ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் ரஜினி காக்கா, கழுகு கதை கூறியிருந்தார். இதை விமர்சிக்கும் விதமாக ரத்னகுமார் அந்த விழாவில் காக்காவை விட கழுகு உயரம் பறந்தாலும் உணவு வேண்டுமென்றால் கீழே தான் வந்தாக வேண்டும் என்று நக்கலாக பேசி இருந்தார். இதுதான் அவரே வாயை விட்டு புண்ணாக்கி கொண்ட சம்பவம்.

Also read: கோமாவில் இருந்து எழுந்து வந்த விஜய்.. மொத்த சக்சஸ் மீட்டையும் அசிங்கப்படுத்திய லோகேஷின் வலது கரம்

அதாவது விஜய்யை பெருமையாக பேசுவதாக நினைத்து ரஜினியை விமர்சித்திருக்கிறார். லோகேஷ் அடுத்ததாக தலைவர் 171 படத்தை தான் இயக்க இருக்கிறார். ஆகையால் எப்படியும் லோகேஷ் உடன்தான் ரத்னகுமாரும் பணியாற்றுவார். இந்த சமயத்தில் ரஜினியை மட்டம் தட்டும்படி ரத்தினகுமார் பேசியது சர்ச்சையாகி உள்ளது.

இதே போல் தான் சிம்புவின் காளை மற்றும் விஷாலின் திமிரு படங்களை இயக்கிய தருண் கோபி ஒரு நடிகரை புகழ்வதற்காக மற்றொரு நடிகரை தாழ்த்தி பேசியிருந்தார். இதனால் சிம்புவை விமர்சிக்கும் படியாகவும் பேசி சர்ச்சை ஏற்பட்ட நிலையில் அதன் பிறகு மன்னிப்பு கேட்டிருந்தார். ஆனாலும் அதன் பிறகு அவரது சினிமா கேரியர் முற்றிலும் திசை மாறி போனது.

அவரால் அடுத்தடுத்த நடிகர்களை வைத்து படம் இயக்க முடியாமல் போன நிலையில் நடிகராக மாறிவிட்டார். மாயாண்டி குடும்பத்தார் போன்ற ஒரு சில படங்களில் தருண் கோபி நடித்திருந்தார். இவ்வாறு வளர்வதற்கு முன்பே பெரிய நடிகர்களை பற்றி விமர்சித்தால் என்ன நடக்கும் என்பதை ரத்னகுமார் மறந்துவிட்டார் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

Also read: காவிச் சட்டை, குங்குமம் வேஷம் போடணும்.. தில்லா அஜித் மாதிரி இருக்க முடியாது விஜய்? – ப்ளூ சட்டை

Trending News