வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

லண்டன் சென்றதால் வடிவேலுக்கு வந்த விபரீதம்.. மீண்டும் சோதனையில் படக்குழு

சினிமா பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் நடிகர் கமல், அர்ஜுன், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தது நாம் எல்லோரும் அறிந்ததே.

தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவான் வடிவேலு, புலிகேசி படத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தடை காலம் முடிந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாநகரம் படத்தின் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் பாடல் காட்சிக்காக படக்குழு லண்டன் சென்றது. அங்கு வடிவேலு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்தவுடன் படக்குழு கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி சென்னை திரும்பியது.

vadivelu london
vadivelu london

சென்னை திரும்பிய வடிவேலுக்கு கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளும் போது கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வடிவேலு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளார்கள். இந்நிலையில் வடிவேலுடன் லண்டனுக்கு சென்ற நாய் சேகர் ரிட்டன்ஸ் படக்குழு தங்களுக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதோ என்ற அச்சத்தில் உள்ளார்கள்.

Trending News