ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

அசீமை படுகேவலமாக திட்டிய ஆண்டவர்.. காரசாரமான பிக்பாஸ் மேடை

விஜய் டிவியின் ஃபேவரிட் என்டர்டைன்மென்ட் ஷோவான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்த நிலையில், தற்போது தான் நிகழ்ச்சி சூடு பிடிக்க துவங்கி உள்ளது. அதிலும் இந்த சீசன் துவங்கப்பட்ட நாளிலிருந்தே சவுண்டு பார்ட்டிகளாக இருக்கும் அசீம் மற்றும் தனலட்சுமி தான் இந்த நிகழ்ச்சியின் சுவாரசிய கூட்டம் நபர்கள் என்பது ரசிகர்களின் கருத்து.

ஆனால் இந்த விஷயத்தை கடந்த வாரம் ரசிகர்களே கமல் முன்பு வெளிப்படையாக தெரிவித்ததால் அவர்களுக்கு இன்னும் கூடுதல் அட்வான்டேஜ் ஆனது. ‘சும்மாவே ஆடுவ இதுல சலங்கை கட்டி விட்டுட்டாங்க’ என்பது போல் அசீம் கடந்த வார கேப்டனாக பொறுப்பேற்று சக போட்டியாளர்களை திணறடித்தார்.

Also Read: தனலட்சுமிக்கு போட்டியாக வரும் அடுத்த சோசியல் மீடியா பிரபலம்.. பிக் பாஸில் களமிறங்கும் வைல்டு கார்டு என்ட்ரி

அதுமட்டுமின்றி பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடிக்கடி ரகளையில் ஈடுபடும் அசீமை கமல் ஒவ்வொரு முறையும் வார்னிங் செய்கிறார். ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாத அசீம் சக போட்டியாளர்களுடன் சண்டைக்கு மல்லு கட்டி கொண்டு தான் இருக்கிறார். அதிலும் கடந்த வாரம் காட்டுவாசிகள் மற்றும் ரோபோ இருவருக்கும் இடையே பல போட்டிகள் நடைபெற்ற நிலையில் அந்த சமயம் அசீம் சக போட்டியாளர்களான அமுதமானுடன் சரிக்கு சரி மல்லுக்கட்டினார்.

இதைப் பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் நிச்சயம் இவர்கள் இருவரும் ஒருவருக்கு மண்டை உடைய போகிறது என்று நினைத்தார்கள். ஆனால் அமுதவாணன் ஒரு கட்டத்தில் அசீம் உடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை நிறுத்திக் கொண்டார். ஆனால் அசீம் மறுபடி மறுபடியும் அவரை விடாமல் சீண்டினார். இதை பார்த்த கமல் இந்த வார வீகெண்டு நிகழ்ச்சியில் அசீமை படு கேவலமாக திட்டினார்.

Also Read: ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ஆடியன்ஸ்.. இந்த வாரம் உறுதியாக வெளியேறும் டம்மி பீஸ்

‘ஆத்திரக்காரர்களுக்கு புத்தி மட்டு’ என்பது போல் அசீம் ஒவ்வொரு முறையும் கமல் அறிவுரை சொல்லும் போது அதையெல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டு மறுபடியும் அவர் தொடர்ந்து ரகளை தான் ஏற்படுகிறார். ஆகையால் அவருக்கு ரெக்கார்ட் அடிச்சிருங்க என்றும் பார்வையாளர்கள் கருத்து தெரிவிப்பதை கமல் வெளிப்படையாகவே அசீமிடம் தெரிவித்து அசிங்கப்படுத்தினார்.

மேலும் அசீமிடம் கமல், ‘திட்டுவது போல் இருப்பதாக நினைக்காதீர்கள். திட்டுகிறேன் என்று நினைத்தாலும் தப்பில்லை’ என்று இந்த வார ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் கேப்டனான அசீமை வறுத்தெடுத்தார் ஆண்டவர். இதனால் ரசிகர்களும் இந்த நிகழ்ச்சியை பார்க்க ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Also Read:சீமை வைத்து ஹீரோவாக காட்டிக் கொள்ளும் விக்ரமன்.. சோசியல் மீடியாவில் கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்

Trending News