பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு பரிச்சயமான தர்ஷன் மற்றும் லாஸ்லியா இருவரும் ஜோடி சேர்ந்து நடிக்கவிருக்கும் படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் விக்ரமன், பார்த்திபன், யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார், லாஸ்லியா, தர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்தப் படத்தை பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் தயாரித்து, அதில் அவரே வயதான முதியவர் போன்ற கதாபாத்திரத்திலும் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்திற்கு ‘கூகுள் குட்டன்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
எனவே டைட்டிலை பார்த்த ரசிகர்கள் ‘டைட்டிலே ரொம்ப வித்தியாசமா இருக்கு’ என்று கமெண்ட் அடித்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல் கடந்த 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் சுபின் ஷாகிர் மற்றும் சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான ‘ஆண்ட்ராய்டு குட்டன்’ என்ற படத்தை தான் தற்போது கே.எஸ். ரவிக்குமார் தமிழில் ரீமேக் செய்யவிருக்கிறார்.
ஆகையால் மலையாளத்தில் காமெடி கலந்த அறிவியல் புனைகதை பாணியில் உருவாக்கப்பட்ட ஆண்ட்ராய்டு குட்டனை, தமிழில் கே.எஸ். ரவிக்குமார் ஒரிஜினல் வெர்ஷனை மிஞ்சும் அளவுக்கு உருவாக்குவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
அதேபோல் 20 வருடம் கழித்து கே.எஸ். ரவிக்குமார் தயாரிக்கும் படத்தில் முதன் முதலாக தர்ஷன் மற்றும் லாஸ்லியா இணைந்து நடிக்க விருக்கின்றனர். இந்தப் படத்தை சபரி சரவணன் இயக்குகிறார். பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.
மேலும் இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் தென்காசியில் தொடங்கப்படும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.