பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் ஏகோபித்த ஆதரவைப் பெற்று தற்போது சினிமாவிலும் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் லாஸ்லியா திருமணமான நடிகரை காதலிப்பதாக பிரபலம் ஒருவர் பீட் செய்துள்ளது வைரல் ஆகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா. இவருக்கும் விஜய் டிவி பிரபலமான கவின் என்ற நடிகருக்கும் இடையில் பிக்பாஸ் வீட்டிற்குள் காதல் உருவாகி பின்னர் முடிவு பெற்றது குறிப்பிடத்தக்கது.
இப்பவும் கூட கவின் ரசிகர்கள் தொடர்ந்து லாஸ்லியாவிடம் கவின் காதல் என்னாச்சு? என தொடர்ந்து கேட்டு வருகின்றனர். இதனால் டென்ஷனான லாஸ்லியா சமீபத்தில் இனிமேல் காதலைப் பற்றி பேச வேண்டாம் என எச்சரிக்கை கொடுத்தார்.
இது ஒருபுறமிருக்க பிரபல நடிகரும் கிரிக்கெட் வீரருமான ஹர்பஜன் சிங் போட்ட ட்வீட் இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டாய் செய்யப்போய் வினையாகி விட்டது என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். பிரெண்ட்ஷிப் என்ற தமிழ் படத்தில் லாஸ்லியா மற்றும் ஹர்பஜன்சிங் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தில் காமெடி நடிகர் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில்தான் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஹர்பஜன் சிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், நீ லாஸ்லியாவை தானே லவ் பண்றேன்னு சொன்ன என்று பிரெண்ட்ஷிப் பட புரமோஷனுக்காக ஒரு ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். தமிழ்நாட்டில் விஷயம் புரியாமல் சிங்கு இந்த வேலையை செய்து விட்டார் போல.
இதனால் சதீஷ்க்கு சங்கு ஊதும் அளவுக்கு சர்ச்சைகள் எழுந்துள்ளது. பொதுவாகவே சதீஷ் நடிகைகளை பார்த்து ஜொல்லு விடுவது தெரிந்த விஷயம்தான். பட புரமோஷன் என்பதால் பெரிய அளவு பிரச்சனையை ஏற்படவில்லை என்கிறார்கள். ஆனால் ஹர்பஜன்சிங் இப்படி கூறியது லாஸ்லியாவுக்கு ரொம்ப வருத்தமாம்.