Losliya: லாஸ்லியா நீ என்ன காஸ்லியா, என்று கவின் பாடியதுதான் லாஸ்லியாவை பார்க்கும் போதெல்லாம் ஞாபகம் வரும். பிக் பாஸ் மூன்றாவது சீசனில் கலக்கிய அழகு தேவதை.
இலங்கைத் தமிழ், குழந்தைத்தனம், சுருக்கென்று வரும் கோபம் என ரசிகர்கள் இவரிடம் ரசித்தது அதிகம்.
என்னதான் இப்போது சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்துக் கொண்டிருந்தாலும், பிக் பாஸ் லாஸ்லியாவை நிறைய இளைஞர்கள் மிஸ் பண்ணுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
கொஞ்சம் பூசினால் போன்ற உடம்பு, க்யூட்டான டான்ஸ், கொஞ்சும் தமிழ் இதுதான் அவரது அடையாளம்.
பிக் பாஸ் வீடு முழுக்க ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்கொண்டு முடியை பிடித்து சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள்.
ஆரம்பத்தில் காதல் கண்டன்டு கொடுக்க நினைத்த கவின் லாஸ்லியாவிடம் கவிழ்ந்து விட்டதெல்லாம் அழகான காதல் கதை.
ஆனால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்த பிறகு இவர்களது காதல் காணாமல் போய்விட்டது. கவின் ஒரு பக்கம் குட்டி சிவகார்த்திகேயன் என்ற பட்டத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
லாஸ்லியா சினிமாவில் ஜெயிக்க இன்னும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார். சமீபத்தில் தான் நடித்த ஹவுஸ்கீப்பிங் படத்தின் ப்ரோமோஷன்காக பிக் பாஸ் எட்டாவது சீசன் சிறப்பு விருந்தினராக போயிருந்தார்.
அவரைப் பார்த்த பல ரசிகர்களும் அதிர்ச்சியானது அவரது உடல் எடையை பார்த்து தான். அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு எடையை குறைத்து இருக்கிறார்.
இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கேட்கப்பட்டது. அதற்குத்தான் பின்பற்றிய டயட் முறையை பற்றி சொல்லி இருக்கிறார்.
அதாவது தன்னுடைய டயட் முறையில் அதிகமான புரோட்டின் மற்றும் பைபர் உணவுகளை எடுத்துக் கொண்டாராம்.
கார்போஹைட்ரேட் உணவுகளை குறைத்து கொண்டாராம். இரவு உணவை ஆறு மணிக்கெல்லாம் சாப்பிட்டு முடித்து விடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.
இதை தவிர்த்து பெரிய அளவில் டயட் பிளான் எல்லாம் எதுவும் அவருக்கு கிடையாது.
விரதம் இருப்பது, வொர்க் அவுட், அரிசி சாப்பாட்டை தவிர்த்து விடுவது என நிறைய கஷ்டமான முறைகளை பலரும் பின்பற்றி வருகிறார்கள். ஆனால் லாஸ்லியா ரொம்ப எளிமையாக உடல் எடையை குறைக்கும் முறையை சொல்லி இருக்கிறார்.