Losliya: லாஸ்லியா தன்னுடைய பட புரமோஷன் பேட்டி ஒன்றில் கவின் பற்றி பேசி இருப்பது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பிக் பாஸில் தொடங்கிய இவர்கள் காதல் அந்த நிகழ்ச்சி முடிந்து ஒரு சில மாதங்களிலேயே முடிவுக்கு வந்தது. கவின் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் ஜென்டில் உமன் பட பிரமோஷனில் கவின் பற்றி லாஸ்லியா பேசியிருக்கிறார்.
சூசகமாக கொளுத்தி போட்ட லாஸ்லியா!
நான் ஏதாவது ஒரு புகைப்படம் பதிவிட்டாலோ, பேட்டி கொடுத்தாலோ உடனே வந்து கவினை பற்றி கேள்வி கேட்கிறார்கள்.
நாங்கள் இருவருமே எங்களுடைய வாழ்க்கையில் அவரவர் பாதையை தேடி பயணிக்க ஆரம்பித்து விட்டோம். இந்த நிலையில் நான் அவரைப் பற்றி பேசினால் அது சரியாக இருக்காது.
அவரைப் பற்றிய கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல ஆரம்பித்தால் அவருக்கு பெண் கொடுத்தவர்களின் மனது ரொம்ப கஷ்டப்படும்.
இதனால் தயவுசெய்து கவின் குறித்த நெகட்டிவிட்டியை என் மீது பரப்பாதீர்கள் என்று பேசி இருக்கிறார்.