வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கவின் கல்யாணம் முடிஞ்சாலும் நிம்மதியா இருக்க விட மாட்ட போல.. லாஸ்லியா போட்ட வைரல் பதிவு

Kavin, Losliya: விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் அறிமுகமான கவின் சரவணன் மீனாட்சி தொடரில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தத் தொடர் அவருக்கு பெரும் புகழும் பெற்று தந்த நிலையில் அடுத்ததாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் இலங்கை தொகுப்பாளரான லாஸ்லியாவும் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் இருவருக்கும் காதல் மலரத் தொடங்கியது. இதற்கு எதிராக இயக்குனர் மற்றும் நடிகருமான சேரன் லாஸ்லியாவுக்கு நிறைய அறிவுரை கூறியிருந்தார். அதேபோல் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த லாஸ்லியாவின் தந்தையும் சற்று கோபமாகவே நடந்து கொண்டார். மேலும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் பிரேக் அப் செய்து விட்டதாக கூறினார்.

Also Read : வெள்ளித்திரையில் ஜொலிக்கும் 5 விஜய் டிவி பிரபலங்கள்.. ஜெயிலரால் ஏறிய நெல்சனின் மவுசு

இதை பல பேட்டிகளில் லாஸ்லியா நேரடியாகவே கூறியிருக்கிறார். இந்நிலையில் திடீரென கவின் தனது நீண்ட நாள் தோழியான மோனிகாவை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி நேற்று மிகவும் எளிமையாக கவின், மோனிகா திருமணம் நடைபெற்றது. இதே நாளில் லாஸ்லியா போட்ட பதிவுதான் இப்போது ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

இன்ஸ்டாவில் தனது சோகமான புகைப்படத்தை வெளியிட்டுள்ள லாஸ்லியா என்னால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை என்ற கேப்ஷனை போட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் கவினை நினைத்து மனம் உருகி தான் லாஸ்லியா இந்த பதிவை போட்டுள்ளார் என்று கமெண்ட் செய்து ஆறுதல் கூறி வருகிறார்கள்.

Also Read : பிக்பாஸ் சீசன் 7ல் களமிறங்கும் நான்கு கதாநாயகிகள்.. டிஆர்பிக்காக விஜய் டிவி போட்ட பக்கா பிளான்

ஒருபுறம் கல்யாணம் முடிஞ்சு என்னை நிம்மதியா லாஸ்லியா இருக்க விடமாட்டா போல என்று கவினின் மைண்ட் வாய்ஸ் இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு கவின் வெள்ளித்திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். லிப்ட், டாடா என தொடர்ந்து வெற்றிப்படங்கள் கவினுக்கு கிடைத்திருக்கிறது.

இப்போது திருமணமும் நல்லபடியாக கைகூடி இருக்கிறது. லாஸ்லியா ஹீரோயினாக நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் போகவில்லை. நினைத்த மாதிரி படங்களில் வெற்றி கிடைக்காத நிலையில் விரக்தியில் இருந்த லாஸ்லியாவுக்கு இது மிகவும் பேர் அதிர்ச்சியாக தான் இருந்திருக்கிறது. ஆனாலும் தனது கனவை நோக்கி லாஸ்லியா முன்னேறுவார் என அவரது ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

லாஸ்லியா போட்ட வைரல் பதிவு

losilya-cinemapettai
losilya-cinemapettai

Also Read : மாலையும் கழுத்துமாக மணக்கோலத்தில் கவின்.. வைரலாகும் திருமண புகைப்படம்

Trending News