ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024

அதிக நஷ்டம், தயாரிப்பாளர் தலையில் துண்டைப் போட்ட 4 படங்கள்.. முருகதாஸ் படத்திற்கு எத்தனை கோடி தெரியுமா.?

இந்திய சினிமா பாக்ஸ் ஆபிஸ் தற்போது இந்தியா தாண்டி உலகம் முழுவதும் பரந்து விரிந்துள்ளது. இந்திய சினிமாவிற்கு தற்போது உலகம் முழுவதும் நல்ல மார்க்கெட் உள்ளது. அதற்கு உதாரணமாக பாகுபலி, தங்கல் படங்கள் அடைந்த வெற்றியும், அதன் பிரமாண்ட வசூல் சாதனையையும் கூறலாம்.

பாகுபலி 2 ரூ.1700 கோடி, பஜிரங்கி பைஜான் ரூ.850 கோடி என வசூல் சாதனை படைத்தது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 2.o 500 கோடிக்கு மேல் வசூலித்திருந்தாலும், பாகுபலி சாதனையை நெருங்கக்கூட முடியவில்லை. பெரிய நடிகர்களின் படங்கள் இவ்வளவு பெரிய வசூல் சாதனை படைத்திருக்கும் அதே நேரத்தில், பெரிய நடிகர்களின் படங்கள் தான் பெரும் தோல்வியையும் சந்தித்து வருகின்றது.

அந்த வகையில், இந்தியாவை பொறுத்த வரை அதிகம் நஷ்டமான படங்கள் என்று பார்த்தால், பாம்பே வெல்வெட், ஸ்பைடர், அஞ்ஞாதவாசி, ரங்கூன் முன் வரிசையில் உள்ளது. அனுராக் காஷ்யூப் இயக்கத்தில் ரன்பீர், அனுஷ்கா ஷர்மா நடித்த பாம்பே வெல்வெட் சுமார் ரூ 120 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரூ 40 கோடி தான் வசூலே செய்தது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான ‘ஸ்பைடர்’ ரூ 150 கோடி வசூல் சாதனை என்று சொன்னாலும், ரூ.80 கோடி தான் வசூல் செய்ததாம். இப்படம் ரூ.120 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது.

தெலுங்கில் பவன் கல்யான் நடிப்பில் வெளியான அஞ்ஞாதவாசி, ரூ 110 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ 85 கோடி தான் வசூல் செய்தது. ஹிந்தியில் விஷால் பரத்வாஜ் இயக்கத்தின் ஷாகித் கங்கனா சயிப் அலிகான் நடிப்பில் வெளிவந்த ரங்கூன் ரூ 90 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ 40 கோடி தான் வசூல் செய்தது.

தமிழ் சினிமாவை பொறுத்த வரை பார்த்தால் பெரிதும் நஷ்டம் எந்த படத்திற்கு இல்லை என்றாலும் தானா சேர்ந்த கூட்டம், பைரவா, விவேகம் ஆகிய படங்கள் ரூ 10 கோடி வரை மட்டுமே நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் தர்பார் படமும் 20 கோடி வரை நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது.

- Advertisement -spot_img

Trending News