திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சினிமாவிலும் ஏகப்பட்ட அட்ஜஸ்ட்மெண்ட் இருக்கு.. பதற வைக்கும் பேட்டியை அளித்த பிரியா பவானி

Actress Priya Bhavani Shankar: முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பிறகு சின்னத்திரை சீரியல் கதாநாயகியாக நடித்து தனது சினிமா பயணத்தை துவங்கிய பிரியா பவானி சங்கர், முதல் முதலாக மேயாத மான் படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு அகிலன் படத்தில் ஜெயம் ரவிவுடனும், பத்து தல படத்தில் சிம்புவுடனும், ருத்ரன் படத்தில் ராகவா லாரன்ஸ் உடனும் நடிப்பதற்கான வாய்ப்பை அடுத்தடுத்து பெற்றார்.

அது மட்டுமல்ல மான்ஸ்டர் படத்திற்கு பிறகு இப்போது பொம்மை என்ற படத்திலும் இரண்டாவது முறையாக எஸ்ஜே சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருக்கிறார். வரும் ஜூன் 16ஆம் தேதி ரிலீசாக இருக்கும் இந்த படத்திற்கான ப்ரமோஷன் வேலைகள் தற்போது படுஜோராக நடந்து கொண்டிருக்கிறது. அதில் கலந்து கொண்ட பிரியா பவானி சங்கரிடம் சுவாரசியமான பல கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது. அதில் அவர் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பல விஷயங்களை புட்டு புட்டு வைத்திருக்கிறார்.

Also Read: சிம்ரன், த்ரிஷாவுக்கு அப்புறம் நீங்க தான் டாப்பு.. 50 வயதிலும் பிரியா பவானிக்கு தூண்டில் போடும் இயக்குனர்

இவர் சினிமாவில் மட்டுமல்ல பிசினஸிலும் அதிக கவனம் செலுத்துகிறார். அந்த வகையில் லியன்ஸ் டைனர் என்று ஹோட்டலை சமீபத்தில் சென்னையில் திறந்தார். இந்த ஹோட்டலை அவர் தனது காதலனுக்காக தான் துவங்கினார் என்றும் கூறப்பட்டது. அதன் பிறகு நீண்ட நாட்களாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காதலனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து, இப்போது சிங்கிளாக தான் சுற்றி வருகிறார்.

இந்த நிலையில் இவருக்கு சினிமாவில் நடந்த அட்ஜஸ்ட்மென்ட் குறித்து மனம் திறந்து பேசியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அட்ஜஸ்மென்ட்டுக்கு ஆளாகும் பெண்கள் தைரியமாக முதலில் பேச வேண்டும். அதைவிட முக்கியமானது அவர்கள் சொல்வதை இந்த சமூகம் முதலில் காது கொடுத்து கேட்க வேண்டும்.

அதே சமயம் தைரியமாக சொல்லும் பெண்கள் மீதே கடைசியில் பழி போடவும் தயங்குவதில்லை. நீ ஏன் இதை முன்கூட்டியே சொல்லவில்லை. இதில் உனக்கு உடன்பாடு இல்லை என்றால் எதற்கு ஒத்துக் கொண்டாய், வளர்ந்த பிறகு இப்போது வாய் திறக்கிறாயே என அடுக்கடுக்காக பல கேள்விகளை கேட்பதை முதலில் நிறுத்துங்கள்.

Also Read: ப்ரியா பவானியைப் போல் நம்மளும் டாப்ல வந்துடலாம்.. புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட 5 நடிகைகள்

அட்ஜஸ்ட்மெண்ட் செய்வது சினிமாவில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் நடந்து கொண்டிருக்கிறது. முக்கியமாக இந்த பிரச்சனையை யாரும் கண்டு கொள்ளாமல் இருக்க கூடாது. பெண்கள் இந்த துறை அந்த துறை அல்ல, எந்தத் துறையில் இருந்தாலும் அவர்களுக்கு உடல் ரீதியாக டார்ச்சர் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். எது மாதிரி வேலை செய்கிறார் என்ற பாகுபாடு இல்லாமல் பல வழிகளில் பலான தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள்.

சினிமாவில் இருப்பவர்களிடம் பகிரங்கமாக கேட்டு விடுகிறீர்கள். ஆனால் இந்தத் துறையில் மட்டுமல்ல பல துறைகளில் இது நடந்து கொண்டே தான் இருக்கிறது என்று மழுப்பலான சிரிப்புடன் பேசி இருக்கிறார். இவர் பேசியதைப் பார்க்கும்போதே ஏகப்பட்ட அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஆளாகி இருப்பது தெரிகிறது. ஒருவேளை அதை உடைத்து சொன்னால் அடுத்தடுத்த பட வாய்ப்பு வராமல் போய்விடும், எதற்கு வம்பு என்று இலைமறை காயாக பிரியா பவானி சங்கர் பேசியது பலரையும் பதற வைத்துள்ளது.

Also Read: எனக்கு போட்டி இவங்க 4 பேரும் தான்.. வெளிப்படையாய் சவால் விட்ட ப்ரியா பவானி சங்கர்

Trending News