ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

இர்பான் இருந்தா குக் வித் கோமாளி 5 பார்க்க மாட்டோம்.. காரணத்தை கேட்டா பதறி போயிடுவீங்க மக்களே

Cook With Comali 5: சமூக வலைத்தளத்தில் நாளுக்கு நாள் நடக்கும் அக்கப்போரு தாங்க முடியவில்லை. நாலு செவத்துக்குள்ள ஒக்காந்து உலகத்துல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுகிறது நல்லது தான். ஆனா அதே நேரத்தில் தேவையில்லாத விஷயங்கள் இந்த சமூக வலைத்தளம் மூலம் பரப்பப்படும் போது உண்மையிலேயே எதுக்கு இந்த தொழில்நுட்பம் இப்படி இருக்குதுன்னு தோன்றுகிறது.

இப்படி சமீபத்தில் இணையதளத்தில் பார்த்து கடுப்பான விஷயம் தான் யூட்யூபர் இர்பான் பற்றி பேசி இருக்கும் கருத்துக்கள். விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விட்டது.

ஒரு பக்கம் மாதம்பட்டி ரங்கராஜ் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தாலும், வெங்கடேஷ் பட் இல்லாதது கொஞ்சம் கடுப்பு தான். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ஃபேவரிட் மருமகள் சுஜிதா இந்த சீசனில் இருப்பது பெரிய பிளஸ்.

அதேபோன்று வி டிவி கணேஷ், ஸ்ரீகாந்த் தேவா, பிரியங்கா தேஷ் பாண்டே, பூஜா என எல்லா போட்டியாளர்களும் மக்களால் அதிகம் விரும்பப்படுபவர்கள் தான். இந்த சீசன் இல் உணவகங்களில் சமைக்கப்படும் உணவுகளுக்கு ரிவ்யூ கொடுக்கும் யூட்யூபர் இர்பான் கூட பங்கேற்று இருக்கிறார்.

இர்பான் நிறைய உணவகங்களுக்கு சென்று அங்கு சமைக்கப்படும் உணவுகளை சாப்பிட்டு மக்களுக்கு விமர்சனம் கொடுத்திருக்கிறார். இவரால் சந்து பொந்துகளில் இருக்கும் கையேந்தி பவன்கள் கூட ஃபேமஸ் ஆனது.

அது மட்டும் இல்லாமல் நட்சத்திரங்களுக்கு சமைத்து கொடுத்து அவர்களை பேட்டி எடுப்பதும் வழக்கம். அது மட்டும் இல்லாமல் சில நேரங்களில் குடும்பத்தோடு சமைத்து அதை வீடியோவாகவும் போடுவார். நேற்றைய தினம் இர்பான், குக் வித் கோமாளி 5 ஒளிபரப்பப்பட்ட பிறகு தனக்கு வந்த கமெண்டை பற்றி ஒரு வீடியோ போட்டு இருக்கிறார்.

அதில் அவர் இருப்பதால் இனி குக் வித் கோமாளி பார்க்க மாட்டோம் என சிலர் கமெண்ட் செய்திருக்கிறார்கள். அந்த கமெண்டின் இறுதியில் ஜெய் ஸ்ரீ ராம் என பதிவிட்டிருப்பது தான் நெருடலாக இருக்கிறது. இர்பான் தனக்கு வந்த கமெண்ட்களை அந்த வீடியோவில் பகிர்ந்து இருந்தார்.

அதில் குறிப்பிட்ட மதத்தை பற்றியும் கசப்பான கருத்துக்கள் பதிவிடப்பட்டு இருக்கின்றன. இது போன்ற ஒரு சமையல் நிகழ்ச்சியில், தேவை இல்லாத கசப்பான உணர்வுகளை புகுத்துவது என்பது ரொம்பவே தவறான விஷயம்.

நமக்கு பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்று ஒரு பெரிய லிஸ்ட் நம் மனதில் இருக்கும். ஆனால் அதற்காக மத உணர்வுகளை அதில் கொண்டு வருவது ரொம்பவே ஏற்கத் தகாத விஷயம்.

Trending News