சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

தளபதி66 படத்திற்கு போட்டி போடும் 5 தயாரிப்பாளர்கள்.. தெலுங்கு நிறுவனத்தை குறி வைக்கும் விஜய்?

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற மாஸ்டர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை இளம் இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளார்.

விரைவில் தளபதி 65 படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ள நிலையில் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் தளபதி 66 படத்தைப் பற்றிய செய்திகள் அதிக அளவில் உலா வந்து கொண்டிருக்கின்றன. மேலும் தளபதி 66 படத்தை மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.

மாஸ்டர் படத்தின் மூலம் விஜய்யை கவர்ந்த லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி 66 படத்தின் இயக்குனர் ரேசில் முதல் இடத்தில் இருக்கிறார். இது ஒரு புறமிருக்க தளபதி விஜய்யை வைத்து படம் தயாரிக்க கிட்டத்தட்ட 5 நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.

மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ், மாஸ்டர் படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித் குமார், ஏஜிஎஸ் நிறுவனம் அதனுடன் சேர்த்து தளபதி 65 படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் ஒரு துண்டை போட்டு இடம் பிடித்து வைத்துள்ளதாம்.

ஆனால் இந்த முறை யாரும் எதிர்பார்க்காத வகையில் தெலுங்கில் பிரமாண்ட படங்களை தயாரித்துக் கொண்டிருக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தளபதி விஜய்யை வைத்த படம் தயாரிக்க ஆர்வமாக உள்ளார்களாம். தெலுங்கு முன்னணி நடிகர்களின் படங்களை தயாரிக்கும் இந்த நிறுவனத்துடன் கைகோர்த்தால் விஜய்யின் மார்க்கெட் தெலுங்கில் இன்னும் பல மடங்கு உயரும் என்பது விஜய்யின் கணக்காம்.

thalapathy66-cinemapettai
Thalapathy66-cinemapettai

ஏற்கனவே மைத்திரி மூவி மேக்கர்ஸ் லோகேஷ் கனகராஜுக்கு அட்வான்ஸ் கொடுத்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அந்த படத்தில் ராம்சரண் நடிக்க இருந்த நிலையில் தற்போது விஜய்யை வைத்து அந்த படத்தை எடுக்கலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

Trending News