வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சுவாரசியங்கள் நிறைந்த கிரிக்கெட் டிரெஸ்ஸிங் ரூம்.. சீனியர் வீரர்களிடம் மாட்டிக்கொள்ளும் ஜூனியர் வீரர்கள்.!

கிரிக்கெட் போட்டிகளில் சில நேரங்களில் ஒரு வீரர் செய்யும் தவறு போட்டியின் முடிவையே மாற்றிவிடும். விளையாடிக் கொண்டிருக்கும் போது எந்த வீரர்கள் தவறு செய்தாலும் சீனியர் வீரர்கள் அதை மைதானத்தில் வெளிப்படுத்த மாட்டார்கள் தட்டிக் கொடுத்து விட்டு சென்றுவிடுவார்கள். ஆனால் ஓய்வறையில் அந்த தவறை சரி செய்யுமாறு திட்டுவார்களாம். அப்படி வீரர்கள் திட்டு வாங்கிய நிகழ்வுகளை இதில் காணலாம்.

சவுரவ் கங்குலியிடம் பார்த்தீவ் பட்டேல்: இந்திய அணியில் மிகச்சிறிய வயதில் அறிமுகமானவர் பார்த்திவ் பட்டேல். இவர் ஒருமுறை ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஸ்டீவ் வாக்யிடம் வம்பு இழுத்தார். ஸ்டீவ் வாக் ஓய்வுபெறும் கடைசி டெஸ்ட் போட்டியில் அவரை அவுட் செய்வதற்காக அவர் எப்பொழுதும் விரும்பி அடிக்கும் சாட்டினை அடிக்க சொல்லி அவரிடம் வாங்கிக் கொண்டாராம். ஸ்டீவ் வாக், பட்டேலிடம் “நான் அறிமுகம் ஆகும் போது நீங்கள் டயப்பர் போட்டுக் கொண்டிருந்தார்கள்” என்று காட்டமாக பதில் அளித்தாராம். இதனைக்கேட்ட கேப்டன் சௌரவ் கங்குலி டிரெஸ்ஸிங் ரூம் சென்றவுடன்” அவர் ஒரு ஜாம்பவான் நீ அவரிடம் வம்பு செய்கிறாயா” என்று பார்த்தீவ் பட்டேல்லை, ரைட் அண்ட் லெப்ட் வாங்கிவிட்டாராம்.

Parthiv-Steve-Cinemapettai.jpg
Parthiv-Steve-Cinemapettai.jpg

வாசிம் அக்ரம் மற்றும் விவி ரிச்சர்ட்ஸ்:  விவி ரிச்சர்ட்ஸ்சை ஒருமுறை அவுட்டாக்கிய வாசிம் அக்ரம் வெளியே போ என்று செய்கை செய்து அவமானப்படுத்தி உள்ளார். போட்டி முடிந்த பின்னர் ரிச்சர்ட்ஸ் மட்டையைத் தூக்கிக் கொண்டு பாகிஸ்தான் அணியின் டிரெஸ்ஸிங் ரூமிற்கு சென்றுள்ளார். அதனைக் கண்ட வாசிம் அக்ரம் இம்ரான் கான் பின்னால் ஒளிந்து கொண்டாராம். அப்பொழுது பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த இப்போதைய பிரதமர் இம்ரான் கான், விவி ரிச்சர்ட்ஸ்சை சமாதானம் செய்து அனுப்பியுள்ளார்.

Akram-Richads-Cinemapettai.jpg
Akram-Richads-Cinemapettai.jpg

ரிக்கி பாண்டிங் மற்றும் சைமன்ஸ்:  2005 ஆம் ஆண்டு முதல்முறையாக வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியா அணி தோற்றது. அந்த போட்டிக்கு முன்னர் அணியிலிருந்து அன்றவ் சைமன்ஸ்சை நீக்கியுள்ளார் கேப்டன் ரிக்கி பாண்டிங். போட்டிக்கு முந்தைய நாள் இரவு விருந்துக்கு சென்ற சைமன்ஸ் அதிகமாக மது அருந்தியதும், பயிற்சியில் தள்ளாடி கீழே விழுந்ததும் ரிக்கி பாண்டிங்கிற்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியதாம். அடுத்தநாள் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தோற்ற பின்னர் டிரெஸ்ஸிங் ரூமில் ஆஸ்திரேலிய வீரர்களை திட்டி தீர்த்துள்ளார் பாண்டிங்.

Ricky-Symonds-Cinemapettai.jpg
Ricky-Symonds-Cinemapettai.jpg

பீட்டர்சன் மற்றும் ஸ்ட்ராஸ்:  இங்கிலாந்து அணியிலிருந்து திடீரென ஓய்வு முடிவை அறிவித்தார் பீட்டர்சன். அதற்கு காரணம் அப்பொழுது கேப்டனாக இருந்த ஸ்ட்ராஸ் தான் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்து அணி டிரெஸ்ஸிங் ரூமில் ஒரு வீரர் எவ்வாறு அவுட் ஆனார் என்பதை நடித்து காட்டவேண்டுமாம். இப்படி நடித்துக் காட்டுவது அவர்கள் டிரெஸ்ஸிங் ரூமில் உள்ள ஒரு வழக்கமாகும். அப்படி நடித்துக் காட்டும்போது பீட்டர்சன் மற்றும் ஸ்டிராஸ் இருவருக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டு பீட்டர்சன் இம்முடிவை எடுத்தார் என்று கூறப்படுகிறது.

Strass-Pieterson-Cinemapettai.jpg
Strass-Pieterson-Cinemapettai.jpg

ஜடேஜா, ரெய்னா மற்றும் தோனி:  இந்திய அணிக்கு பில்டிங்கில் பெயர் எடுத்துக் கொடுத்தவர் ரவீந்திர ஜடேஜா மற்றும் சுரேஷ் ரெய்னா. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் ஜடேஜாவின் பந்துவீச்சில் இரண்டு கேட்ச்களைத் தவறவிட்டார் ரெய்னா. ஆத்திரமடைந்த ஜடேஜா மைதானம் என்று யோசிக்காமல் ரெய்னாவிடம் சண்டைக்கு சென்றார். தோனி விளையாடாத அந்தப் போட்டியில் இவ்வாறு நடைபெற்றது. அதனைக் கண்ட தோனி இருவரையும் திட்டித் தீர்த்துள்ளார்.

Raina-Jadeja-Cinemapettai.jpg
Raina-Jadeja-Cinemapettai.jpg

Trending News