சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

தன்னை விட 10 வயது குறைந்த நடிகையுடன் காதல், டேட்டிங்? சிம்புவின் பிடியில் சிக்கிய ஆடு

சிம்புவுக்கு பிரபல இளம் நடிகையுடன் காதல் என்றெல்லாம் இணையதளங்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் பரவி வரும் நிலையில் இதுகுறித்த ஒரு அலசல் இது.

சிம்பு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தாலும் அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவருக்கு 41 வயதாகும் நிலையில் அவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். குறிப்பாக, வல்லவன் படத்தில் நடித்தபோது, உடன் நடித்த நயன்தாராவுடன் காதலில் விழுந்தார். அப்போது இருவரும் எடுத்த புகைப்படங்கள் இணையதளத்தில் லீக்காகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இருவரும் பிரிந்தனர்.

அதேபோல் பிரபல நடிகரின் மகளை சிம்பு காதலித்ததாகவும் அதன்பின் பிரேக் அப் ஆகிடவே இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பின், சிம்புவும் அப்பெண்ணும் தொலைபேசியில் பேசுவது போன்ற ஆடியோவும் சமூக வலைதளங்களில் பரவின. இதுவும் பெரிய பரபரப்பை கிளப்பியது. இதையடுத்து, வாலு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது, நடிகை ஹன்சிகாவுடன் காதலில் இருந்த சிம்பு அவர்களுக்குள் என்ன நடந்ததோ அந்தக் காதலும் திடீரென்று முடிவுக்கு வந்தது.

இதனால் காதலுக்கும் சிம்புக்கும் ஏழாம் பொருத்தமோ என்று பலரும் கூறி வந்தனர். இதெல்லாம் பிரேக் அப்பான காதல் என்றால் அலை, விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் உடன் நடித்த திரிஷா உடன் காதல் என்றும் சிம்புவைப் பற்றி கிசுகிசுக்கள் வந்தன.
ஆனால் இதெல்லாம் உண்மையில்லை என்று சிம்பு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், சிம்பு குடும்பத்தார் அவர் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது பற்றிக் கவலை தெரிவித்த நிலையில், சிம்புவுக்கு சினிமாவில் ரெட் கார்ட், படங்கள் தோல்வி, பட வாய்ப்பு குறைவு, உடல் எடை கூடியது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால்தான் அவர் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்க காரணமோ என கேள்வி எழுந்தன.

இந்த நிலையில், சிம்பு மீண்டும் ஃபார்முக்கு திரும்பி மாநாடு மூலம் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்து, முன்னணி நடிகராக மாஸ் காட்டி வரும் நிலையில், 31 வயது இளம் நடிகை ஸ்ரீநிதியுடன் சிம்பு காதல், டேட்டிங் என்று வதந்திகள் பரவியது.

விரைவில் தன்னை விட 10 வயது இளம் நடிகை ஸ்ரீநிதியை சிம்பு திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் கூறப்பட்ட நிலையில், இதெல்லாம் சுத்தப் பொய் என்று சிம்பு வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கெல்லாம் பதில் சொல்வதற்கு நேரமின்றி தற்போது சினிமாவில் மீது மட்டுமே முழு கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. கடந்த 2021 ஆம் ஆண்டு சுசீந்தரன் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஈஸ்வரன் என்ற படத்தில் இணைந்து நடித்த நிலையில், எதன் அடிப்படையில் இருவரும் காதலித்து வருவதாக வதந்திகள் பரப்பி வருகின்றனர் என தெரியவில்லை என சிம்பு ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

Trending News