சனிக்கிழமை, அக்டோபர் 26, 2024

படம் முடிந்தவுடன் நடிகருக்கு விழுந்த அடி.. பாவம்யா அந்த மனுஷன்.. பறந்து வந்து அடித்த ஆன்ட்டி

தெலுங்கில் உருவாகியிருக்கும் லவ் ரெட்டி படத்தின் திரையிடல் தற்போது நடந்து முடிந்துள்ளது. அந்த நிகழ்வில் நடந்தது ஒரு பெரும் சம்பவம். இனி வில்லன் நடிகர்கள் கொஞ்சம் உஷாராக தான் வெளியில் செல்ல வேண்டும் போல..

ஒரு படத்தில் ஹீரோ கதாபாத்திரம் நன்றாக இருந்தால் மக்கள் அந்த நடிகரை கொண்டாடுகிறார்கள். அதேபோல ஒரு வில்லன் கதாபாத்திரம் நன்றாக இருந்தால் மக்களுக்கு அந்த நடிகரின் மேலும் ஒரு தங்களை மீறிய ஒரு கோபம் ஏற்பட்டு விடுகிறது.

ரசிகர்களுக்கு ஏற்படும் வெறுப்பை வைத்து தான் ஒரு வில்லன் நடிகரின் நடிப்பையும் வளர்ச்சியையும் இடை போடுகிறார்கள். கர்ணன் படத்தில் நட்டி, ஜிகர்தண்டா படத்தில் நவீன் சந்திரா, மகாராஜா படத்தில் சிங்கம் புலி என தங்கள் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்த நடிகர்களை பல ரசிகர்கள் ஃபோன் செய்து திட்டியதாக அவர்களே தெரிவித்துள்ளார்கள்.

திட்டுவது கூட பிரச்சனை இல்ல.. இந்த சீரியல் வில்லிகளை எல்லாம் சாபம் விட்டு செருப்பால் அடித்த கதையெல்லாம் உண்டு. தற்போதும் ஒரு பட வில்லன்னுக்கு இந்த துயர சம்பவம் தான் நடந்துள்ளது. படத்தை பார்த்து பாவம் அந்த ஆண்ட்டி ரொம்ப எமோஷன் ஆகிவிட்டார். 

பறந்து வந்து பளாரென அடி

ஸ்மரன் ரெட்டி இயக்கத்தில் கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி வெளியான படம் லவ் ரெட்டி. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் என் டி ராமசாமி நடித்துள்ளார். உண்மை கதையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இப்படம் கடந்த 18 ஆம் தேதி வெளியாகி நல்ல ரெஸ்பான்ஸை பெற்று வருகிறது.

படத்தில் தனது மகளை தான் காதலித்தவனிடம் இருந்து சதி செய்து பிரித்துவிடுகிறார் வில்லன். படத்திற்கு ப்ரோமோஷன் செய்யும் விதமாக படக்குழுவினர் கோலர் மல்டிபிளக்ஸ்  திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்க்க சென்றனர். அப்போது படம் முடிந்து படக்குழுவினர் நின்று கொண்டிருந்தபோது பெண் ஒருவர் கூட்டத்தில் இருந்து வந்து வில்லன் நடிகர் என்.டி. ராமசாமியை பளார் பளார் என கன்னத்தில் அறைந்தார்.

பாவம் அந்த வில்லனுக்கு என்ன நடக்கிறது என்று புரிவதற்க்குள்ளையே இந்த பெண் இப்படி பண்ணிவிட்டார். இந்த நிலையில் தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. “ஏம்மா.. அது படம், அது நடிப்பு ன்னு கூடவா உனக்கு தெரியாது. இல்ல இது தான் சாக்கு என்று ஒரே அரை விட்டீர்களா” என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 

- Advertisement -spot_img

Trending News