சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

மீண்டும் பிரதீப்பை லாக் செய்த பிரபல நிறுவனம், ஹீரோ யார் தெரியுமா ? 100 கோடி வசூல் பார்த்த கை சும்மா இருக்குமா!

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் குறும்படங்களின் மூலம் தன்னுடைய இயக்குனர் கனவை தொடங்கியவர். இன்று கோலிவுட்டின் ஒரு மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக மாறியிருக்கிறார். நல்ல கதைக்கு பெரிய ஹீரோவோ, ஹீரோயினா அதிக பட்ஜெட்டோ தேவையில்லை என்பதை மீண்டும் தமிழ் சினிமாவுக்கு உணர்த்திய இயக்குனர் இவர்.

2019 ஆம் ஆண்டு கோமாளி என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர் ஆனார் பிரதீப். கடந்த பத்து ஆண்டுகளில் ஒட்டுமொத்த சமூகமும் எப்படி நவநாகரீகமாக மாறியிருக்கிறது என்பதை இந்த படத்தில் சொல்லியிருந்தார். இந்த படம் ஜெயம் ரவிக்கு ஒரு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. 15 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் 50 கோடி வரை வசூல் செய்தது.

Also Read: அள்ளிக் கொடுத்த 100 கோடி வசூல் கிள்ளி கொடுத்த தயாரிப்பாளர்.. லவ் டுடே படத்திற்கு பிரதீப் வாங்கிய சம்பளம்

அதன்பின்னர் 3 வருட இடைவெளிக்கு பின் பிரதீப் இயக்கிய திரைப்படம் தான் லவ் டுடே. இந்த படம் ஒட்டுமொத்த கோலிவுட்டுக்கே ஒரு மிகப்பெரிய தாக்கமாக அமைந்தது. தமிழ்நாடு மட்டுமில்லாமல் தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்தது இந்த கதை. பிரதீப் ரங்கநாதனை இப்போது ஒட்டுமொத்த திரையுலகமும் கொண்டாடி வருகிறது.

இந்நிலையில் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகியிருக்கிறது. பிரதீப்பின் அடுத்த படத்தை, லவ் டுடே படத்தை தயாரித்த அதே ஏஜிஎஸ் நிறுவனமே தயாரிக்கிறது. கதைகளை கையில் வைத்து கொண்டு பிரதீப் அலைந்த காலம் போய், இப்போது கோலிவுட்டின் முக்கிய தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் அவரை லாக் செய்த காலம் வந்துவிட்டது.

Also Read: கோடம்பாக்கத்தில் குஸ்தியை ஏற்படுத்தும் லவ் டுடே பிரதீப்.. நன்றி கடனுக்காக செய்த வேலையால் வந்த விபரீதம்

இதற்கெல்லாம் காரணம் அவருடைய முந்தைய படமான லவ் டுடே படத்தின் வெற்றி தான். 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 90 கோடியை தாண்டி இதுவரை வசூல் செய்திருக்கிறது. ஓடிடியில் ரிலீஸ் ஆன பின்னும் இந்த படம் இன்னும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படி பிரதீப்பை வைத்து பணம் பார்த்த நிறுவனம் மீண்டும் அதே ஆசையில் அவரை லாக் செய்துவிட்டது,

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்திற்கு தளபதி விஜய் தான் ஹீரோ என பேசப்பட்டு வந்த நிலையில் இந்த படத்திற்கும் அவரே தான் ஹீரோ. மேலும் இவருக்கு இந்த படத்திற்காக 2 கோடி சம்பளம் பேசப்பட்டு இருக்கிறது. இந்த முறை ஏஜேஸ் நிறுவனமே அசந்து போகும் அளவிற்கு படத்தின் கதையை சொல்லி அசத்தி இருக்கிறாராம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.

Also Read: 2022-இல் குறைந்த பட்ஜெட்டில் பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்த 6 படங்கள்.. ஆல் ரவுண்டராக கலக்கிய பிரதீப்

Trending News