ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

நான்கே நாட்களில் போட்ட காசை டபுள் மடங்காக எடுத்த லவ் டுடே.. மொத்த வசூல் விவரம்

கடந்த இரண்டு, மூன்று நாட்களாக இணையத்தில் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த பேசு பொருளாக இருப்பது லவ் டுடே படம் தான். இன்றைய காதல் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக இப்படம் காட்டியுள்ளது. இளைய சமுதாயத்திடையே இப்படத்திற்கு ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்து இருக்கும் இப்படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். காபி வித் காதல் படத்திற்கு போட்டியாக வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் அதிகப்படியான திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டு வருகிறது.

Also Read : காந்தாரா படத்தைக் காப்பியடித்த லவ் டுடே.. அக்கட தேசத்திலும் டஃப் கொடுக்கும் பிரதீப் ரங்கநாதன்

இப்போது லவ் டுடே படத்தின் நான்காவது நாள் வசூல் வெளியாகி உள்ளது. மொத்தமாக இப்படம் 18 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் அந்த வசூலை நான்கே நாட்களில் லவ் டுடே படம் எடுத்துள்ளது. முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 3 கோடி வசூல் செய்திருந்தது.

இந்த படத்திற்கு கிடைத்த நல்ல விமர்சனத்தின் காரணமாக சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் விடுமுறை நாட்கள் என்பதால் வசூலை வாரி குவித்துள்ளது. அதாவது சனிக்கிழமை 5.35 கோடி வசூலும் அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை 6.25 கோடி வசூலும் செய்திருந்தது.

Also Read : பிளாக் ஷீப் போல சினிமாவில் கால்பதிக்கும் பிரபல யூடியூபர்.. லவ் டுடே பிரதீப்புக்கு இவர் தான் போட்டியா?

இந்நிலையில் நான்காவது நாள் முடிவில் 3.15 கோடி வசூல் செய்துள்ளது. மொத்தமாக லவ் டுடே படம் நான்கு நாட்களில் 17.75 கோடி வசூலை எட்டி உள்ளது. இப்போது போட்ட வசூலை கிட்டத்தட்ட நெருங்கி உள்ளதால் இனி வருவது எல்லாம் படக்குழுவுக்கு லாபம் தான்.

மிகக் குறுகிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இது போன்ற படங்களுக்கு தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் லவ் டுடே படத்தின் வெற்றியின் மூலம் பிரதீப் ரங்கராதனுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளது.

Also Read :இளசுகளின் கனவு கன்னியாக மாறிய லவ் டுடே இவானா.. தம்மாத்துண்டு இடுப்பை காட்டி மயக்கிய புகைப்படங்கள்

Trending News