ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

வசூலில் டாப் கியரில் செல்லும் லவ் டுடே.. இரண்டு நாளைக்கே இவ்வளவா?

பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்து திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் லவ் டுடே. மிகக் குறுகிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீப காலமாக இது போன்ற படங்களுக்கு தமிழ் சினிமாவில் நல்ல அங்கீகாரம் கிடைத்து வருகிறது.

அண்மையில் வெளியான காந்தாரா படமும் மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் மாபெரும் வரவேற்பை பெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட இந்த படத்திற்கு பாராட்டுகளை தெரிவித்து இருந்தார். அதேபோல் தற்போது சைலன்டாக வந்து ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு பெற்று வருகிறது லவ் டுடே.

Also Read :ரிலீஸ் அன்றே மண்ணை கவ்விய சுந்தர் சி.. பாசிட்டிவ் ரிப்போட்டால் லவ் டுடேக்கு அடித்த லக்

இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு மற்றும் பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த காலகட்டத்தில் காதல் எப்படி இருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக லவ் டுடே படம் காட்டுகிறது. இப்படம் தற்போது உள்ள இளைய சமுதாயத்திடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் நல்ல வசூலை பெறுவதை காட்டிலும் லவ் டுடே போன்ற படங்களுக்கு இவ்வளவு வசூல் பெறுவது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இரண்டாவது நாள் முடிவில் தமிழ்நாட்டில் மட்டும் 6.6 கோடி வசூல் செய்துள்ளது.

Also Read :காதலைக் கேவலப்படுத்தும் இந்த தலைமுறைக்கு செருப்படி கொடுத்த லவ் டுடே.. ட்விட்டர்ல இவங்க விமர்சனம்தான் ட்ரெண்டிங்

அதேபோல் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 9.5 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் கடந்த இரண்டு நாட்கள் முடிவில் தமிழ்நாட்டில் மொத்தமாக 10.6 கோடியும் உலகம் முழுவதும் 15.5 கோடியும் வசூல் செய்துள்ளது. இப்படத்துக்கு தொடர்ந்து நல்ல விமர்சனம் கிடைத்து வருவதால் வசூல் டாப் கியரில் செல்கிறது.

தமிழ் சினிமாவில் நன்கு பரிச்சயமான டாப் நடிகர்களின் படங்களைக் காட்டிலும் இளம் நடிகரான பிரதீப் படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் போட்ட பட்ஜெட்டை விட பல மடங்கு வசூலை சில நாட்களிலேயே லவ் டுடே படம் பெற உள்ளது.

Also Read :காத்து வாக்குல ரெண்டு காதலை மிஞ்சிய லவ் டுடே ட்ரெய்லர்.. சிம்பு கைராசி No.1 ட்ரெண்டிங்கில் அசத்தல்

Trending News