விஜய் நடிப்பில் ஒரு தலை காதலை மையப்படுத்தி 1997 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் லவ் டுடே. ஆனால் அந்த திரைப்படத்திற்கு அப்படியே நேர்மாறாக தற்போது பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து வெளியாகி இருக்கும் லவ் டுடே திரைப்படம் முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தை கொண்டு இருக்கிறது. இன்று வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம் பற்றிய விமர்சனம் தான் டிவிட்டர் தளத்தில் வைரலாக சென்று கொண்டிருக்கிறது.
இன்றைய கால காதல் எப்படி இருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக காட்டி இருக்கும் இப்படத்தில் இவானா, சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனாலேயே தற்போது இளைஞர்கள் இந்த திரைப்படத்தை ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். தற்போது இந்த திரைப்படத்தைப் பற்றிய விரிவான விமர்சனத்தை இங்கு காண்போம்.
Also read:காத்து வாக்குல ரெண்டு காதலை மிஞ்சிய லவ் டுடே ட்ரெய்லர்.. சிம்பு கைராசி No.1 ட்ரெண்டிங்கில் அசத்தல்
கதைப்படி சத்யராஜின் மகளான இவானா, பிரதீப் ரங்கநாதனை காதலிக்கிறார். நன்றாக சென்று கொண்டிருக்கும் இந்த காதலை இருவரும் தங்கள் வீட்டில் தெரிவிக்கின்றனர். அப்போது சத்யராஜை காண வரும் பிரதீப் ரங்கநாதன் தங்கள் காதலைப் பற்றி பேசுகிறார். அப்போது சத்யராஜ் எதிர்பாராத விதமாக ஒரு நிபந்தனை விதிக்கிறார்.
அதாவது நீங்கள் இருவரும் உண்மை காதலர்கள் தானே, அதனால் ஒரே ஒரு இரவு மட்டும் உங்கள் இருவரின் செல்போன்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். அதற்கு ஒப்புக்கொள்ளும் இருவரும் தங்கள் செல்போன்களை மாற்றிக் கொள்கின்றனர். ஆனால் அந்த நாள்தான் கதையின் முக்கிய திருப்பமாக அமைகிறது.
Also read:அஜித், விஜய்யை ஓவர்டேக் செய்ய தன்னைத்தானே செதுக்கும் நடிகர்.. அவங்க மாஸ் தலைவா, நீங்க வேற லெவல்
இந்த சம்பவத்தினால் காதலர்கள் இருவருக்கும் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதையெல்லாம் சமாளித்து இந்த காதலில் அவர்கள் வெற்றி பெற்றார்களா, இல்லையா என்பது தான் லவ் டுடே திரைப்படத்தின் கதை. தற்போது பலரும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் இன்றைய கால காதலை கேவலப்படுத்தும் தலைமுறைக்கு செருப்படி கொடுக்கும் விதமாகவும் இந்த திரைப்படம் அமைந்திருக்கிறது.
காதல் என்றால் என்ன என்று நாம் புரிந்து கொள்வதற்கு நிச்சயம் இந்த படம் உதவியாக இருக்கிறது. படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கேரக்டர்களும் கதைக்கு ஏற்றவாறு தங்களுடைய பங்களிப்பை கனக்கச்சிதமாக கொடுத்திருப்பது படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. மேலும் 90 கிட்ஸ் எங்க கால காதல் தான் உண்மை காதல் என்று மார்தட்டி சொல்லும் அளவுக்கு இந்த திரைப்படம் அனைவரையும் கவர்ந்துள்ளது. அந்த வகையில் இந்த லவ் டுடே இன்றைய தலைமுறைகளை நன்றாகவே யோசிக்க வைத்திருக்கிறது.
Also read:டிஆர்பி ரேஸில் முதலிடம் பிடித்த விஜய்.. கமல், அஜித்தை பின்னுக்கு தள்ளிய பீஸ்ட்