சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சைலென்ட்டாக சாதித்த லோ பட்ஜெட் படங்கள்.. இன்றளவும் கெத்து காட்டும் தினேஷ்

முன்பு போல இல்லாமல் தற்போதெல்லாம் ரசிகர் மனநிலை மாறிவிட்டது.  முன்பெல்லாம் பெரிய நடிகர்களின் படத்தை மட்டுமே தியேட்டர் சென்று பார்ப்பார்கள்.  சின்ன பட்ஜெட் படங்கள், நல்ல படங்களாகவே இருந்தாலும், டிவியில் தான் பார்ப்பார்கள்.

OTT வந்த பிறகும் இந்த கலாச்சாரமே தொடர்கிறது.  இந்த நிலையில், தற்போது, நம் மக்களின் மனநிலை மாறி உள்ளது. 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாகவே இருந்தாலும், படத்தில் கதை சரி இல்லையென்றால், அதை ஓரம் கட்டிவிட்டு, நல்ல கதை உள்ள சின்ன பட்ஜெட் படங்களையே பார்க்கிறார்கள்.  அப்படி இந்த வருடம் சாதித்த சின்ன பட்ஜெட் படங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 

கடந்த 10 மாதங்களில், தமிழில் மட்டும் 180 படங்கள் வெளிவந்தன. இதில் குப்பையில் சில மாணிக்கங்கள் போல சில படங்கள் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது.

ஸ்டார்: கவின் நடிப்பில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் வேட்டை நடத்தியுள்ளது. 7 கோடியில் வெளியான இந்த படம் 25 கோடிக்கு மேல் வசூல் நடத்தியது.

கருடன்: 20 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 100 கோடி கிளப்பில் இணைந்தது. சூரி-க்கு இரண்டாம் படமும் 100 கோடி வசூல் வேட்டை நடத்தியது, அவரை முழு நேர ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியுள்ளது.

மகாராஜா:  நித்திலன் ஸ்வாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50 ஆவது படமாக உருவான இந்த படம், வெறும் 25 கோடி செலவில் உருவாகி, 100 கோடி-க்கு மேல் வசூல் வேட்டை நடத்தி சாதனை படைத்தது. 

கொட்டுக்காலி: 5 கோடியில் உருவான இந்த படம் போட்ட பணத்தை எடுத்துள்ளது. சாதாரண மக்களுக்கு படம் ஒட்டவில்லை என்றாலும், சினிமா ஆர்வலர்கள் மத்தியில் படம் பாராட்டை பெற்றது.

வாழை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக்கி, பெரும் ஹீரோக்கள் யாரும் இல்லாமல், இந்த படம் சாதித்தது. வெறும் 5 கோடியில் உருவான இந்த படம் 30 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. 

மெய்யழகன்: 35 கோடி செலவில் உருவான இந்த படம் theatrical profit ஆக 33 கோடி ரூபாய் வசூல் செய்தது. இது தவிர ott, satellite உரிமம் போன்றவைகள் மூலம் நல்ல லாபம் பார்த்துள்ளது. 

லப்பர் பந்து: இன்றளவும், இந்த படம் தியேட்டர்களில் ஓடி கொண்டு தான் இருக்கிறது. வெறும் 7 கோடி செலவில் உருவான இந்த படம், 50 கோடி க்கு மேல் வசூல் செய்து, ஹரிஷ் கல்யாணுக்கும் தினேஷ் க்கும் அடையாளத்தை வாங்கி கொடுத்துள்ளது. 

பிளாக்: 15 கோடி செலவில் உருவான ஜீவாவின் பிளாக் படம், நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதுவும் வேட்டையன் படத்தோடு போட்டி போட்டு, இன்றளவும் ஓடி கொண்டிருக்கிறது. 

Trending News