‘வாழை’ படத்தில் நடித்த பிரபல நடிகரும், ‘லப்பர் பந்து‘ படத்தில் நடித்த மற்றொரு பிரபல நடிகரும் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளனர். தங்களில் ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதைத் தேர்வு, நடிப்பு, திறமையைக் காட்டி வரும் இவ்விரு நடிகர்களும் சேர்ந்து நடித்துள்ள இப்புதிய படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மிஸ்கின், பா.ரஞ்சித் பட்டறையில் இருந்து வந்த கலையரசன் ‘மெட்ராஸ்’, ‘ராஜா மந்திரி’,’டார்லிங் 2′ போன்ற படங்களின் மூலம் நடிகராக அறியப்பட்டாலும் சமீபத்தில் வாழை என்ற படத்தில் நடித்ததன் மூலம் அவர் சிறந்த நடிகராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில், பொன்வேல் எம், இராகுல் ஆர், நிகிலா விமல், கலையரசன் ஆகியோர் நடிப்பில், சந்தோஷ் நாராயண இசையில் ஆகஸ்ட்-23 ஆம் தேதி வெளியானது.
வித்தியாசமான படங்களை கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் இப்படத்தின் தன் சிறுவயதில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக இப்பட புரமோசனின் போது மாரி செல்வராஜ் கூறியிருந்தார். இவர் இதற்கு முன்னர் இயக்கிய படங்களைப் போலவே இதுவும் ஜாதி ரீதியாலான படம் என விமர்சனங்கள் எழுந்தாலும் சினிமாத்துறையினராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆஸ்கருக்கும் பரிந்துரைக்கப்பட்டது.
மலையாள சினிமாவுக்கு டப் கொடுப்பது போல தமிழ் சினிமாவிலும் நிறைய நல்ல படங்கள் வெளியாகின்றன. அந்த வரிசையில், ‘வாழை’ படத்தை அடுத்து செப்டம்பர் 20 ஆம் தேதி ரிலீஸான படம் லப்பர் பந்து. தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரீஸ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா ஆகியோர் நடிப்பில் உருவான இப்படம் கிரிக்கெட் விளையாட்டு, கிராமத்து வாழ்வியலை அழுத்தமாகக் கூறியது.
இப்படத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதில், பேட்ஸ்மேனாகவும் ஹீரோயின் அப்பாவாகவும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அட்டகத்தி தினேஷ் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். சினிமாவில் 10 ஆண்டுகளில் அவரது வளர்ச்சி குறைவு என்றாலும் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகப் பலரும் கூறிப் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் வாழைப் படமும் சூப்பர் ஹிட், லப்பர் பந்து படமும் சூப்பர் ஹிட். இவ்விரு படங்களில் மெயின் ரோலில் அதாவது வாழை படத்தில் கனி என்ற கேரக்டரில் நடித்த கலையரசனும், லப்பர் பந்து படத்தில், கெத்து என்ற கேரக்டரில் நடித்திருந்த தினேஷும் இணைந்து ‘தண்டகாரண்யம்’ படத்தில் நடித்துள்ளனர்.
ஆதிரை ஆதியன் இயக்கத்தில், தினேஷ், கலையரசன் நடிப்பில், ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல்பார்வை டீசர் நேற்று வெளியானது. இப்படம் பற்றி பா.ரஞ்சித், ஒரு நாட்டை பாதுகாக்க வெறும் துப்பாக்கி பீரங்கி அணுகுண்டுளால் மட்டுமே முடியாது என்று பதிவிட்டிருந்தார். இப்படத்தின் டீசரும் வைரலானது.
இந்த நிலையில் பல கோடியில், ஏஐ தொழில் நுட்பத்தில் எடுக்கப்படும் சூப்பர் ஸ்டார் படங்களுக்கு கதை தான் சூப்பர் ஸ்டார் என்பதை ‘வாழை’, ‘லப்பர் பந்து’ போன்ற படங்கள் உணர்த்திய நிலையில், தண்டகாரண்யமும் அப்படங்களின் வரிசையில் இணையும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.