வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

அது நாங்க டெய்லி பண்ணுவோம்.. லப்பர் பந்து நாயகியின் கணவர் சொன்ன பகீர் தகவல்

லப்பர் பந்து தமிழ்நாட்டில் கோடிக் கணக்கில் வசூலை அள்ளி குவித்து வருகிறது. இப்படத்தை தமிழரசன் பச்சை முத்து என்ற அறிமுக இயக்குநர் இயக்கியுள்ளார். இவரது நேர்த்தியான இந்த படைப்பின் காரணமாக ரசிகர்கள் இப்படத்தினை கொண்டாடி வருகின்றனர்.

ஹரீஷ் கல்யாண், தினேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இப்படம் கடந்த செப்டம்பர் 20 அன்று வெளியாகியது. இப்படத்திற்கு தொடக்கத்தில் சில திரையரங்குகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து கூடுதல் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

திரையரங்குகளில் 15 நாட்களைக் கடந்து வெற்றி கரமாக லப்பர் பந்து ஓடி வருகிறது. இந்த நிலையில், 16 நாட்களில் லப்பர் பந்து திரைப்படம் உலகளவில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வசூலாக பார்க்கப்படுகிறது. இப்படம் பெரிய ஸ்டார்கள் யாரும் இல்லாமல், கம்மியான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் மக்கள் நல்ல படங்களை தவறவிடுவதில்லை என்பதற்கு இந்த படம் ஒரு எடுத்துகாட்டாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் கதாநாயகிகளுக்கு நல்ல வரவேற்பு தற்போது கிடைத்துள்ளது. குறிப்பாக மலையாள நடிகை ஸ்வாசிகாவுக்கு இது ஒரு திருப்புமுனை படமாகவே அமைந்துள்ளது.

டெய்லி நாங்க இத பண்ணுவோம்

நடிகை சுவாசிக்க வைகை என்ற படத்தில் அறிமுகமானார். ஆனால், அதற்க்கு பிறகு இங்கு தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் அதனால மலையாள படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்த நிலையில் சமீபத்தில் தான் அவருக்கு திருமணமும் நடந்து முடிந்தது.

ஸ்வாசிக்காவின் கணவர் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அவர் சொன்ன விஷயம், ரசிகர்களை ஆச்சரிய பட வைத்துள்ளது. சினிமா விளம்பர படப்பிடிப்புகளுக்கு கிளம்பும்பொது, எப்போதும் என் காலில் விழுந்து வணங்கி விட்டு தான் செல்வார்.

அதே போல தான் நானும். நானும் என் மனைவி காலை தொட்டு தினமும் வணங்குவேன். மேலும் நான் சாப்பிட்ட பிறகு, அதே தட்டில் தான் அவரும் சாப்பிடுவார். ஒருவேளை, நான் சாப்பிட்ட தட்டில், கை கழுவி விட்டால், அவருக்கு கோவம் வந்துவிடும்.

அவருக்கு பாரம்பரிய கலாச்சாரம் மிகவும் பிடிக்கும். அதை எப்போதுமே பின்பற்றுவார். அதில் அவருக்கு ஒரு சந்தோசம் என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.. மேலும் கொடுத்தவச்சவர் ப்ரோ நீங்க.. என்றும் கமெண்ட் செய்து வருகிறார்.

Trending News