வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

இதுவரை லப்பர் பந்து ஆடிய வசூல் வேட்டை.. மொத்த படக்குழுவும் செய்த ஒரே தவறு

லப்பர் பந்து கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ரிலீஸானது. இந்த படம் கிட்டத்தட்ட ஐந்து கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. படம் எல்லா பக்கமும் சக்க போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அனைத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர்களிலும் இந்த படத்திற்கு நிறைய ஸ்கிரீன் ஒதுக்கி உள்ளனர்.

இதுவரை இந்த படம் ஒன்பது கோடி வரை வசூல் செய்து விட்டது. இன்னமும் இந்த படத்தின் வசூலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ரிலீசான ஒரு வாரத்திலேயே இந்த படம் கிட்டத்தட்ட 10 கோடிகளை நெருங்கிவிட்டது. கடந்த வாரம் மட்டும் மொத்தம் ஏழு படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளது.

மொத்த படக்குழுவும் செய்த ஒரே தவறு

ரிலீசான ஏழு படங்களுக்குமே தியேட்டர்களில் காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஏழு படங்களில் இந்த படத்திற்கு மட்டும்தான் பேராதரவு கிடைத்து நல்ல ரிவ்யூ வந்து கொண்டிருக்கிறது. இது மட்டும் தனியாக ரிலீஸ் ஆகியிருந்தால் இதுவரை 25 கோடிகள் வரை வசூல் வேட்டையாடி இருக்கும்.

இப்படித்தான் கடந்த மாதம் தனியாக ரிலீசான படம் ஒன்று 35 கோடிகள் வசூலித்து சாதனை படைத்துள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன் நடிப்பில் வெளிவந்த வாழை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 35 கோடியில் வசூல் சாதனை செய்தது.

இப்பொழுது படக் குழுவினர் இந்த படத்தை தனியாக ரிலீஸ் செய்திருக்கலாம் என யோசித்து வருத்தத்தில் இருக்கின்றனர். எல்லா தியேட்டர்களிலும் இப்பொழுது இந்த படத்திற்கு காட்சிகளை அதிகப்படுத்தி வருகின்றனர்.கடந்த வாரம் இந்த படத்தோடு சேர்த்து ஹிப் ஹாப் ஆதியின் கடைசி உலகப் போர், சசிகுமாரின் நந்தன் போன்ற படங்களும் ரிலீஸ் ஆனது.

Trending News