சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

வசூலில் விளையாடும் லப்பர் பந்து.. ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.?

Lubber pandhu : தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி தியேட்டரில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் படம் தான் லப்பர் பந்து. வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார் ஹரிஷ் கல்யாண். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவருக்கு லப்பர் பந்து வெற்றியை கொடுத்து இருக்கிறது.

ஹரிஷ் கல்யாண் காட்டிலும் லப்பர் பந்து படத்தில் ஸ்கோர் செய்தது அட்டகத்தி தினேஷ் தான். அதுவும் விஜயகாந்தின் தீவிர ரசிகராக இதில் நடித்திருக்கும் அவருக்கு எக்கச்சக்க பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஒரு நல்ல என்டர்டைன்மென்ட் படத்தை இயக்குனர் கொடுத்திருக்கிறார்.

மேலும் ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. தற்போது வரை கிட்டத்தட்ட 20 கோடியை தாண்டி வசூல் வேட்டையாடி வருகிறது. இப்படம் இந்த மாதம் ஓடிடிக்கு வர இருக்கிறது.

ஓடிடியில் வெளியாக உள்ள லப்பர் பந்து

விஜய்யின் கோட் படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான நிலையில் ஒரு மாதத்திற்கு உள்ளாகவே நாளை அக்டோபர் மூன்று ஓடிடியில் வெளியாகிறது. அதேபோல் லப்பர் பந்த படம் வெளியான மூன்று வாரங்கள் ஆகியும் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

ஆகையால் இந்த மாத இறுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. அதுவும் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளம் லப்பர் பந்து படத்தை வாங்கியுள்ளது. தியேட்டரில் நல்ல வரவேற்பை பெற்ற படங்கள் ஓடிடியிலும் நன்றாக ஓடுகிறது.

சமீபத்தில் கூட விஜய் சேதுபதியின் மகாராஜா படம் ரசிகர்களை கவர்ந்த நிலையில் ஓடிடியிலும் அதிக பார்வையாளர்களை கடந்திருந்தது. அதேபோல் லப்பர் பந்து படத்திற்கும் ரசிகர்கள் அதிகம் ஓடிடியில் பார்க்க ஆர்வமாக காத்து இருக்கிறார்கள்.

வசூலில் விளையாடும் ஹரிஷ் கல்யாணின் லப்பர் பந்து

Trending News