Amaran-Lucky Baskhar: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழில் அமரன், பிளடி பெக்கர், பிரதர் ஆகிய படங்கள் வெளியானது. அதேபோல் தெலுங்கில் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படமும் வெளியானது. அது தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் துல்கர் சல்மான் சந்திக்கும் பிரச்சனைகளும் விளைவுகளும் தான் படத்தின் கதை. பீரியட் க்ரைம் அம்சம் கொண்டு வெளியாகி இருக்கும் இப்படம் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தீபாவளி ரிலீஸை பொருத்தவரையில் தமிழில் அமரன் தான் நாலா பக்கமும் வசூலை வாரி குவித்து வருகிறது. 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது வரை 150 கோடிகளை வசூலித்துள்ளது.
அரசியல் பிரபலங்கள் முதல் திரை பிரபலங்கள் வரை அனைவரும் படத்தை பாராட்டி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க சத்தமில்லாமல் லக்கி பாஸ்கர் படமும் தமிழ்நாட்டில் சாதனை புரிந்துள்ளது.
அமரனுக்கு போட்டியாக வந்த லக்கி பாஸ்கர்
அதன்படி 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் தற்போது வரை 50 கோடிகளை தாண்டி வசூலித்திருக்கிறது. அது மட்டும் இன்றி தமிழ்நாட்டில் முதல் நாளில் 75 ஸ்கிரீன்களில் திரையிடப்பட்டது.
அது இரண்டாவது நாளில் 180 ஆக மாறியது. மூன்றாவது நாளில் 200 நான்காவது நாளில் 320 என உயர தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஐந்தாவது நாளில் 470 ஸ்கிரீன்களும் ஆறாவது நாளில் 534 ஸ்கிரீன்களிலும் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் துல்கர் சல்மான் தரமான ஒரு வெற்றியை பதிவு செய்திருக்கிறார். எப்போதுமே தமிழ் ரசிகர்கள் மற்ற மொழியில் வெளியாகும் தரமான படங்களுக்கும் வரவேற்பு கொடுப்பார்கள். அது லக்கி பாஸ்கர் படத்திலும் உறுதியாகி இருக்கிறது.