வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

Vijay Tv Heroes: திருமணத்தால் 8 ஹீரோகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. விஜய் டிவி தூக்கி வளர்த்த 3 செல்லப் பிள்ளைகள்

After marriage getting hero chance: சினிமாவை பொறுத்தவரை ஹீரோயின்களாக நடிக்கும் நடிகைகள் திருமணம் பண்ணாமல் இருந்தால் தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைக்கும். அதன் மூலம் தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருக்கும். ஆனால் இந்த நிலைமை நடிகைகளுக்கு மட்டும் தான். ஹீரோவாக ஜொலிக்கும் நடிகர்களுக்கு அழகும் திறமையும் இருந்தால் போதும் அவர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும்.

அப்படி சில நடிகர்கள் திருமணத்திற்கு பிறகு தான் ஹீரோவாக ஜொலித்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட ஹீரோக்கள் யார் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.

சரத்குமார்: இவருக்கு 1984 ஆம் ஆண்டு தான் முதல் திருமணம் நடந்தது. அதன் பின் 1988 ஆம் ஆண்டு சினிமாவிற்குள் ஒரு தயாரிப்பாளராகவும் சின்ன கதாபாத்திரத்தில் நடிக்கும் கேரக்டருக்குள் அறிமுகமானார். இதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த பாலைவன பறவைகள் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அடுத்து தொடர்ந்து பல படங்களில் வில்லன் மற்றும் ஹீரோவாக ஜொலித்து இவருக்கு என்று ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

விஜய் சேதுபதி: விஜய் சேதுபதியின் காதல் திருமணம் 2003 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன்பின் தான் சினிமாவிற்குள் நுழைந்தார். அதாவது கல்யாணம் பண்ண அடுத்த வருடமே எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் குத்துச் சண்டை மாணவராக அங்கீகாரப்படாத கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதன் பின் புதுப்பேட்டை, லீ, வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பலே பாண்டியா போன்ற படங்களில் சிறு கேரக்டரில் நடித்தார். அடுத்து 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தற்போது தவிர்க்க முடியாத நடிகராக ஜெயித்து விட்டார்.

விஜய் டிவி தூக்கி வளர்த்த பிள்ளைகள்

சூரி: வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் புரோட்டா சூரி அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து வந்த இவர் ஹீரோவாக விடுதலை படத்தின் மூலம் அடி எடுத்து வைத்து விட்டார். தற்போது ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டு நடித்து வருகிறார். ஆனால் இதற்கெல்லாம் முன்னதாகவே சூரிக்கு திருமணம் முடிந்து விட்டது. திருமணத்துக்கு பிறகு தான் இவருக்கு ராசி என்று சொல்லும் அளவிற்கு அதிர்ஷ்டம் கொட்டிஇருக்கிறது.

ரியோ: ஆரம்பத்தில் ஸ்டார் விஜய் மற்றும் சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக இவருடைய பயணத்தை தொடங்கிய இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் பழனி கேரக்டரில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பின் சரவணன் மீனாட்சி சீசன் 3 சீரியலில் ஹீரோவாகவும், ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அடுத்து ரெடி ஸ்டெடி போ, ஜோடி நம்பர் 1 அன்லிமிடெட், பிக் பாஸ் போன்று விஜய் டிவிலையே காலத்தை ஓட்டி வந்தார். அதன் மூலம் தான் இவருக்கு வெள்ளி திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்று தற்போது ஒரு ரொமாண்டிக் ஹீரோவாக பெயர் எடுத்திருக்கிறார். 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டியுடன் வாழ்ந்து வருகிறான்.

சந்தானம்: விஜய் டிவி மூலம் அறிமுகமாகி வெள்ளி திரையில் காமெடி நடிகராக அடி எடுத்து வைத்தார். தொடர்ந்து பல படங்களில் ஹீரோக்கு இணையாக காமெடியில் கலக்கி வந்த இவர் ஒரு கட்டத்தில் நானும் ஹீரோவாக கூறுகிறேன் என்று தற்போது தொடர்ந்து ஹீரோவாக நடித்துக் கொண்டு வருகிறார். இவருக்கு 2004 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு தான் அரை எண் 35 கடவுள் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

சிவகார்த்திகேயன்: விஜய் டிவியில் தொகுப்பாளராக மக்கள் மனதை கொள்ளை அடித்து நம்ம வீட்டுப் பிள்ளையாக பெயர் எடுத்தார். அந்தப் பெயர் புகழையும் வைத்துக்கொண்டு வெள்ளி திரையில் ஹீரோவாக அடி எடுத்து வைத்தார். தற்போது தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக ஜொலித்து வருகிறார். இவர் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் இப்படம் வெளிவரும் முன்னரே அத்தை மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆர்.ஜே பாலாஜி: காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி கொண்டு வருகிறார். 2019 ஆம் ஆண்டு LKG படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்னதாக இவருடைய 27 வது வயதிலேயே காதல் திருமணத்தை செய்து கொண்டார். தற்போது மக்களை எந்த டைமண்ட் பண்ணும் வகையில் கதையை தேர்ந்தெடுத்து ஹீரோவாக இவருக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

மாதவன்: 2000 ஆண்டு வெளிவந்த அலைபாயுதே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் இப்படத்தில் நடிப்பதற்கு முன் திருமணம் செய்து கொண்டு அதன் பின் தான் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். ஆனாலும் மாதவனுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று பெண் ரசிகர்கள் இவருக்கு எக்கச்சக்கமாக கிடைத்தார்கள். அந்தளவிற்கு ரொமான்டிக் ஹீரோவாக ரசிகர்களின் கிரஷ் ஆக ஜொலித்திருக்கிறார்.

இவர்களைப் போன்று இன்னும் சில ஹீரோக்கள் திருமணத்திற்கு பின் கதையின் நாயகனாகவும் ஹீரோவாகவும் நடித்துக் கொண்டு வருகிறார்கள்.

Trending News