கீழே கிடந்த 20 டாலரை எடுத்து லாட்டரி வாங்கியவருக்கு அதிர்ஷ்டம்.. ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்

lottery
lottery

இந்த உலகில் வாழ அத்தியாவசிய தேவைகள் இருந்தாலே போதும். ஆனால், நினைத்த மாதிரி ஆடம்பரமாகவும் சொகுசாகவும் வாழுவதற்குத்தான் நமக்கு பணம் தேவை. அத்தியாவசியத்தில் தேவைக்கு மிஞ்சிய எதுவும் தேவையில்லைதான். ஆனால் ஆடம்பரத்தில் தேவையில்லாதவை மீதும் ஒரு முதலீடு இருப்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் என பலரும் கூறப்படுகிறது.

லாட்டரி சீட்டு

இந்த நிலையில், லாட்டரி சீட்டு முறை வெளிநாடுகளிலும் பரவலாக இருக்கும் நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நபர் தெருவில் கீழே கிடந்த ரூ.20 டாலரை கொண்டு லாட்டரி சீட்டு வாங்கியதில் அவருக்கு ஜாக்பாட் அடித்து அவரை ஒரே நாளில் கோடீஸ்வராக்கியுள்ளது.

அமெரிக்காவின் வட கரோலினா பகுதியைச் சேர்ந்தவர் ஜெர்ரி ஹிக்ஸ். இவர் கடந்த 22 ஆம் தேதி அங்குள்ள ஒரு கடைக்குச் சென்றிருந்தார். அப்போது கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு வெளியே வந்தவர், தன் வாகனம் நிறுத்திய ஸ்டேண்டுக்கு வந்தபோது, கீழே 20 டாலர்கள் கிடப்பதைப் பார்த்து, அதை எடுத்துக் கொண்டு லாட்டரி விற்பனை கூடத்திற்குச் சென்றார்.

அதாவது, என்.சி 105 – ல் ஸ்பீட் வேயில் நடந்து சென்று, ஒரு கேஷ் கிராட்ச் வாங்கினார். அப்போது, அவர் தேடிய லாட்டரி சீட்டு அவருக்கு கிடைக்கவில்லை. ஆனால் என்ன நினைத்தாரோ, வேறு லாட்டரி சீட்டை வாங்கினார். கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பார்கள் அல்லவ? அது ஜெர்ரிக்கு நடந்துள்ளது.

1 மில்லியன் டாலர் பரிசு

அதாவது, ஜெர்ரி வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 1 மில்லியன் டாலர் பரிசு கிடைத்துள்ளது. அவருக்கு இரண்டு ஆப்சன்கள் கொடுக்கப்பட்டன. அதில் 20 ஆண்டுகளில் 50,000 டாலர்கள் அல்லது மொத்தப் பரிசுத்தொகையான 6,00,000 டாலர்கள் பரிசு பெறுவது. இந்த இரண்டில் 2 வது ஆப்சனை தேர்வு செய்து மொத்தப் பரிசுத்தொகையையும் அவர் வென்றார். அதன்படி, வரி பிடித்தம் செய்யப்பட்ட பின் அவருக்கு 429,007 டாலர்கள் கையில் கிடைத்துள்ளது.

லாட்டரி சீட்டு மூலம் ஒரே நாளில் கோடிஸ்வரரான ஜெர்ரிக்கு நல்ல வசதியான ஒரு வீடு, கார், குழந்தைகள் படிப்புக்கு இந்தப் பணத்தைச் செலவழிக்க இருப்பதாகவும், இத்தனை ஆண்டுகள் தச்சர் தொழிலை செய்து வந்த நிலையில் அதிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவர் பெற்ற பணத்தில் அவரது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

jerri

Advertisement Amazon Prime Banner