வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

லியோவால் த்ரிஷாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. 2 இயக்குனர்கள் சேர்ந்து இயக்கம் ஒரே படம்

Actress Trisha: த்ரிஷா 40 வயது தாண்டிய நிலையிலும் சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்து ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வருகிறார். இடைப்பட்ட காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார் என்ற நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக கம்பேக் கொடுத்து பான் இந்தியா ஹீரோயினாக டபுள் மடங்காக ரசிகர்களிடம் இடம் பிடித்து விட்டார்.

தற்போது லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இதனை அடுத்து அஜித் உடன் விடாமுயற்சி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதை தவிர முன்னணி ஹீரோக்களின் பட வாய்ப்புகளும் இவரை தேடி வந்து கொண்டிருக்கிறது.

Also read: சிம்ரன், த்ரிஷாவுக்கு அப்புறம் நீங்க தான் டாப்பு.. 50 வயதிலும் பிரியா பவானிக்கு தூண்டில் போடும் இயக்குனர்

அடுத்ததாக தமிழ் படங்களையும் தாண்டி மலையாள படங்களில் கமிட்டாகி இருக்கிறார். இவர் ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு “ஹே ஜூட்” படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அடுத்ததாக மோகன்லால் கூட “ராம்” என்ற மலையாள படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.

இதனை அடுத்து மூன்றாவது முறையாக டோவினோ தாமஸ் என்பவர் உடன் ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார். இப்படத்தை இரண்டு இயக்குனர்களான அகில் பால் மற்றும் அனஸ் கான் இயக்க உள்ளார்கள். இவர்கள் ஏற்கனவே ஃபோரன்சிக் என்ற திரைப்படத்தை 2020 ஆம் ஆண்டு இயக்கியிருக்கிறார்கள். இப்படத்திலும் கதாநாயகனாக டோவினோ தான் நடித்திருக்கிறார்.

Also read: த்ரிஷாவுக்கு போட்டியாக களம் இறங்கும் 90ஸ் ஹீரோயின்.. 20 வருடத்திற்கு பிறகு விஜய்யுடன் ஜோடி போடும் நடிகை

இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் மறுபடியும் த்ரிஷா மற்றும் டோவினோ வைத்து ஐடென்டிட்டி என்ற படத்தை இயக்க இருக்கிறார்கள். அத்துடன் இவர்களுடைய ஜோடியே மிகவும் எதிர்பார்ப்புடன் மலையாள ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே டோவினோ அங்குள்ள ரசிகர்களுக்கு கிரஷ்ஷாக இருக்கிறார்.

இந்த நிலையில் த்ரிஷா இவருடன் ஜோடி சேர்ந்து நடிப்பது பலரும் பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறார்கள். மேலும் த்ரிஷாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வருவதால் அவருடைய முழு கவனமும் நடிப்பில் தான் இருக்கிறது. அதனால் இப்போதைக்கு இவருடைய திருமணத்தைப் பற்றி எந்தவித யோசனையும் இல்லை என்று கூறி வருகிறார்.

Also read: பட வாய்ப்பு இல்லாததால் கமல் கைபிடித்து தூக்கி விட்ட 6 நடிகைகள்.. த்ரிஷாக்கு அடித்த ஜாக்பாட்

Trending News