திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

Rajini: லைக்கா ரஜினி இடையே நடக்கும் கடும் உள்புகைச்சல்.. உடைந்த பாலத்தை சரி செய்ய போகும் இந்தியன் 2

Rajini: கடந்த ஐந்து வருடமாக ரஜினி நடிக்கும் படங்களை கலாநிதி மாறன் மற்றும் லைக்கா நிறுவனம் தான் மாத்தி மாத்தி தயாரித்துக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்த வருடம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி கேமியோ தோற்றத்தில் நடித்து வெளிவந்த லால் சலாம் படத்தையும் லைக்கா நிறுவனம் தான் தயாரித்தது.

ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த படம் ரஜினி படம் என்று சொல்லும்படியான பெயர் வாங்கவில்லை. மக்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வணிக ரீதியாக நஷ்டம் ஏற்படும் அளவிற்கு கொண்டு போய் விட்டது. லைக்கா இந்தப் படத்தை தயாரித்ததற்கான ஒரே காரணம் ரஜினி நடிக்கிறார் என்பதற்காகத் தான்.

ஏனென்றால் இவர் நடித்தால் கண்டிப்பாக அந்த படம் வசூல் ரீதியாக லாபம் கிடைத்துவிடும். ஆனால் லால் சலாம் படம் ஒட்டு மொத்த நம்பிக்கையும் குழி தோண்டி புதைத்து விட்டது என்றே சொல்லலாம். இதற்கு காரணம் லைக்கா தான் படத்தை சரியாக பிரமோஷன் பண்ணாமல் கவுத்து விட்டது என்று ரஜினி, லைக்கா மீது கடும் மனக்கசப்பில் இருந்திருக்கிறார்.

கச்சிதமாக பிளான் பண்ணி காய் நகர்த்தும் லைக்கா

இதனை தொடர்ந்து வேட்டையின் படத்தில் கூட இவர்கள் இருவருக்கும் நிறைய விஷயங்கள் ஒத்துப் போகவே இல்லை. ஆனால் இப்படியே இருந்தால் சரிப்பட்டு வராது என்று லைக்கா தற்போது ஒரு முடிவு பண்ணி இருக்கிறது. எப்படியாவது ரஜினியை தாஜா பண்ணி சமாதானப்படுத்தினால் மட்டும்தான் தொடர்ந்து வேட்டையன் படபிடிப்பு சுமுகமாக போகும்.

அப்படி போனால் மட்டும்தான் வேட்டையன் படத்தில் லாபத்தை பார்க்க முடியும் என்று லைக்கா நிறுவனம் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. அதாவது லைக்கா தான் இந்தியன் 2 படத்தையும் தயாரித்திருக்கிறது. அந்த வகையில் வருகிற 16-ஆம் தேதி நேரு ஸ்டூடியத்தில் மிகப்பிரமாண்டமாக இந்தியன் 2 படத்தின் ஆடியோ லான்ச் நடைபெறப் போகிறது.

அதற்கு சீப் கெஸ்ட் ஆக ரஜினியை கூப்பிட்டு கௌரவப்படுத்தினால் எல்லா பிரச்சனையும் சரி செய்து விடலாம் என்று லைக்கா தந்திரமாக பிளான் பண்ணி இருக்கிறது. எப்படியாவது இருக்கும் மனக்கசப்பை இந்த ஆடியோ லான்ச் மூலம் தீர்த்து விடனும் என்று ரஜினிக்கு அழைப்பு கொடுத்திருக்கிறார். லைக்கா கூப்பிட்டதற்காக இல்லை என்றாலும் கமலுக்காகவாது கண்டிப்பாக ரஜினி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News