ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை எடுத்து வருகிறார் ஷங்கர். இந்த படத்திற்கான பிஸ்னஸ் இப்பொழுது பல கண்டிஷன்களுடன் நடந்து வருகிறது. படத்தை முழுவதுமாக பார்த்த பிறகு தான் இதற்கு ஒரு தொகையை நிர்ணயிக்க முடியும் என எல்லா நிறுவனங்களும் தடாலடியாக அறிவித்து விட்டது
ஏற்கனவே சங்கர் இயக்கிய இந்தியன் 2 படம் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானது. இந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கெல்லாம் பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இப்பொழுது இந்தியன் 3 படத்தை நேரடியாக ஓ டி டியில் வெளியிட யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஓ டி டி நிறுவனமாகிய நெட்லிக்ஸ் இந்தியன் 2 படத்தை அதிக விலை கொடுத்து வாங்கியதால். இப்பொழுது இந்தியன்3 படத்தை தங்களுக்கு கம்மியான விலைக்கு கொடுக்குமாறு பேசி வருகிறார்கள். இதன் மூலம் பழைய நஷ்டத்தை ஈடு கட்டி விடலாம் என திட்டம் போட்டு வருகிறார்கள்.
மறுபடியும்மான்னு தெரிந்து ஓடும் சுபாஸ்கரன்
இதுபோக இந்த படத்தை வாங்கி நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள் எல்லோரும் இந்தியன்3 படத்தை மிகவும் கம்மியான விலைக்கு கேட்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இன்னும் 30 நாட்கள் இந்தியன் 3 பட சூட்டிங் பாக்கி இருக்கிறதாம்.
இதனால் எடுத்தவரை போதும் ஷங்கரை இனிமேல் நம்பினால் ஆபத்து என்று சுபாஸ்கரன் இந்த படத்தை நெட்பிளிக்சில் நேரடியாக ரிலீஸ் செய்து விடலாம் என யோசித்து வருகிறார்.எப்படியாவது இந்த படத்தை தள்ளிவிட்டாக வேண்டும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டது லைக்கா. ஷங்கரை நம்பி இன்னும் பல கோடிகளை விரையம் செய்ய தயாராக இல்லை லைக்கா.