Indian 3 : ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படம் தான் இந்தியன் 2. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இந்த படம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. இது இணையத்தில் மிகுந்த ட்ரோலுக்கும் உள்ளானது. இதனால் பெரிய அளவில் இந்தியன் 2 படத்திற்கு லாபம் கிடைக்கவில்லை.
இந்தியன் 3 படத்தை எப்படி வெளியிடுவது என்று தெரியாமல் லைக்கா நிறுவனம் முழித்து வருகிறது. ஏற்கனவே இந்தியன் 2 படத்தை வெளியிட்டு விநியோகஸ்தர்கள் நஷ்டத்தை சந்தித்ததாக புலம்பி வருகிறார்கள். இதனால் ஷங்கர் ராம்சரணின் கேம் சேஞ்சர் படத்தை வெளியிட முடிவெடுத்தார்.
இந்த படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றால் அதன் பிறகு இந்தியன் 3 படத்தின் பிசினஸ் அமோகமாக இருக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் இப்போது லைக்கா வேறு ஒரு முடிவை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியன் 3 படம் குறித்து லைக்கா எடுத்த முடிவு
அதாவது இந்தியன் 2 படம் தியேட்டர் வெளியீட்டுக்கு பிறகு ஓடிடியில் ரிலீஸ் ஆனது. நெட்பிளிக்ஸ் இந்த படத்தை 125 கோடி கொடுத்து வாங்கி இருந்தது. இப்போது இந்தியன் 3 திரைப்படத்தை தியேட்டரில் வெளியிட்டால் விநியோகஸ்தர்கள் ஏற்கனவே நஷ்டத்தை கணக்கு காட்டி பிரச்சனை செய்ய வாய்ப்பிருக்கிறது.
இதனால் நேரடியாக இந்தியன் 3 படத்தை ஓடிடியில் வெளியிட லைக்கா முடிவெடுத்திருக்கிறதாம். நெட்பிளிக்ஸ் பெரிய தொகைக்கு இந்த படத்தை கேட்டால் கண்டிப்பாக கொடுத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இந்தியன் 2 படத்தை விட இந்தியன் 3 நன்றாக இருப்பதாக ஏற்கனவே பலரும் கூறியிருந்தனர்.
ஆகையால் தியேட்டரில் லாபத்தை எல்லாம் ஈடு செய்யும் அளவிற்கு நெட்பிளிக்ஸ் நல்ல தொகை கொடுத்தால் ஓடிடிக்கு கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. இல்லையென்றால் நேரடியாகவே தியேட்டர் ரிலீஸ் செய்து விடலாம் என்ற முடிவில் லைக்கா இருக்கிறதாம்.
இந்தியன் 2 படத்தால் ஷங்கருக்கு ஏற்பட்ட தலைவலி
- மீண்டும் 7 அதிசயங்களை கையில் எடுத்த ஷங்கர்
- ஷங்கரின் மரண பயணத்தைப் போக்க கை கொடுக்கும் ரெண்டு டாப் ஹீரோக்கள்!
- புளியங்கொம்பாக பார்த்து பிடித்த ஷங்கர் பட நடிகை