சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

குட் நியூஸ் சொன்ன லைக்கா.. பூசணிக்காய் உடைத்து ரிலீஸ் டேட் பிக்ஸ் பண்ணிய சுபாஸ்கரன்

மிகக் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் அழுத்தமாக கால் பதித்து உள்ளது லைக்கா நிறுவனம். கடைசியாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான லால் சலாம் படத்தை லைக்கா தயாரித்திருந்தது.

இந்த படம் எதிர்பார்த்த அளவு போகாத காரணத்தினால் இந்நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தது. இப்போது லைக்கா அஜித்தின் விடாமுயற்சி மற்றும் ஷங்கர், கமல் கூட்டணியில் உருவாகும் இந்தியன் ஆகிய படங்களை தயாரித்து வருகிறது.

விடாமுயற்சி படப்பிடிப்பு இப்போது மீண்டும் தொடங்க வாய்ப்பில்லை என்பது போல் தெரிகிறது. ஏனென்றால் அஜித் அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் விடாமுயற்சிக்கு முன்பே ரிலீஸாகும் என கூறப்படுகிறது.

இந்தியன் 2 ரிலீஸ் தேதி

இந்நிலையில் லைக்கா இப்போது ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்று சொல்லி இருக்கிறது. அதாவது இந்தியன் 2 படத்திற்கான ரிலீஸ் தேதி லாக் செய்துள்ளனர். ஏப்ரல் மாதம் தேர்தல் நடக்க உள்ளதால் அதற்கு அடுத்த மாதம் இந்தியன் 2 வெளியாகிறது.

கோடை விடுமுறை என்பதால் கண்டிப்பாக மக்கள் கூட்டம் தியேட்டரில் அலைமோதும் என கருத்தில் கொண்டு மே 24 ஐ பிக்ஸ் செய்து வைத்துள்ளனர். இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிந்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக இந்தியன் 3 படத்தில் 70% வேலை முடிந்துள்ளது. அதற்கான பின்னணி வேலைகளையும் படக்குழு தீவிரமாக செய்து வருகிறது. விக்ரம் படத்திற்குப் பிறகு கமல் ரசிகர்கள் பெரிதும் இந்தியன் 2 படத்திற்காக எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

Trending News