வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பெரிய ஹீரோக்களுடன் பகையை வளர்த்துக் கொள்ளும் லைகா.. அஜித், ரஜினி, விஜய்யால் சரியப்போகும் சாம்ராஜ்யம்

லைகாவிற்கு சினிமாவில் திடீர் அதிரடியாய் எல்லோருடைய அறிமுகமும் கிடைத்து மேலும் மேலும் தன் கொடியை பறக்க செய்தது. குறிப்பாக பெரிய ஹீரோக்களுடன் தங்களுடைய நட்பை வளர்த்துக் கொண்டு பெரிய பட்ஜெட் படங்களை கையில் எடுத்து வெற்றி கண்டது. ஆனால் இப்பொழுது அந்த நிறுவனம் செய்யும் தவறால் மொத்த சாம்ராஜ்யம் சரிவிற்கு வரும் நிலையில் உள்ளது.

அஜித்துடன் வந்த மனஸ்தாபம்: லைகா நிறுவனம் தற்போது அஜித்தின் விடா முயற்சி படத்தை தயாரித்து வருகிறார்கள். ஏற்கனவே இந்த படம் ஜவ்மிட்டாய் மாதிரி இழுத்துக் கொண்டு போகிறது. இந்த இழுத்தடிப்புக்கு காரணம் அஜித்தானாம். லண்டனில் பிசினஸில் கொடி கட்டி பறந்து வரும் லைகா மூலம் அஜித் அங்கே இடம் வாங்கியுள்ளார். அதில் பிரச்சினை ஏற்பட்டு அவர்களுக்குள் வந்த மனஸ்தாபத்தால் படம் பாதிக்கிறது.

ரஜினியுடன் வந்த சலசலப்பு: சமீபத்தில் வெளியான ரஜினியின் வேட்டையன் படத்தை தயாரித்தது லைகாதான். இந்த படத்திற்காக வெறும் 40 கோடிகள் மட்டுமே ரஜினிக்கு கொடுத்திருக்கிறார்கள். மீத தொகையை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளனர். அதனால் ரஜினி டப்பிங் பேசாமல் தன் கெத்தை காட்டியுள்ளார்.

ஆரம்பித்திலேயே விஜய்யுடன் வந்த மோதல்: 2014ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி விஜய்யின் கத்தி படம் ரிலீஸ் ஆனது. அதன் பின் இன்று வரை விஜய் லைகாவிற்கு கால் சீட் கொடுக்கவில்லை. இதிலிருந்து அவர்களுக்குள் பிரச்சனை இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

இப்படி பெரிய ஹீரோக்களுடன் மனக்கசப்பை ஏற்படுத்தி பிரச்சனையில் சிக்கி வருகிறது லைகா. எல்லாத்துக்கும் காரணம் இவர்களுக்குள்ள நிதி நெருக்கடி தான். அதை சமாளித்து வெளியே வந்தால் மட்டுமே லைகா நிறுவனம் இனிவரும் காலங்களில் தங்களுடைய சாம்ராஜ்யத்தை காப்பாற்றிக் கொள்ளலாம்

Trending News