மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த இந்தியன் 2 படம் கடைசியில் மண்ணை கவ்வியது. ஜூலை 12 இந்த படம் ரிலீசானது. கிட்டத்தட்ட 2400 காட்சிகள் முதல் நாளில் திரையிடப்பட்டது. அதோடு இந்த படத்தின் வசூல் வேட்டையும் நிறைவு பெற்றது.
எல்லா பக்கமும் இந்த படம் நல்லா இல்லை என்ற எதிர்வலைகள் கிளம்பியது. முதல் நாளில் மட்டும் இந்த படம் நான்கு கோடிகள் வசூல் செய்தது. அதன் பின் மொத்தமாய் சரிவை சந்தித்தது. பலபேர் கமல் மற்றும் சங்கர் என்னும் பிரம்மாண்ட கூட்டணியை நம்பி ஏமாற்றம் அடைந்தார்கள்.
தியேட்டர் விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் என எல்லோருக்கும் இந்த படத்தால் பெரும் நஷ்டம் தான்.இந்த படத்தின் பட்ஜெட் மேற்படி செலவுகள் என 300 கோடிகளுக்கு மேல் லைக்கா செலவழித்து விட்டது. ஆனால் இந்தியன் 2 வசூலித்த தொகை வெறும் 83 கோடிகள் மட்டும் தான். இதனால் கடும் அப்செட்டில் இருக்கிறது லைக்கா.
இந்தியன் 2 ஓடிடி ரிலீசில் நெட்பிலிக்ஸ் செய்த அநியாயம்
இந்தப் படத்தை நம்பி நெட்பிலிக்ஸ் நிறுவனம் 125 கோடிகள் கொடுத்து ஓ டி டி உரிமையை வாங்கியுள்ளது. ஆனால் ரிலீசுக்கு பின்னர் வந்த நெருக்கடியால் வெறும் 65 கோடிகள் மட்டுமே கொடுத்துள்ளது. இதனை எதிர்த்து லைக்கா பேச முடியாத சூழ்நிலையில் மாட்டிக்கொண்டுள்ளது.
படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன மூன்றாவது நாளில் ஓ டி டி நிறுவனங்களுக்கு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து படத்தின் கன்டன்ட்டை கொடுக்க வேண்டுமாம். ஆனால் லைக்கா தரப்பிலிருந்து நெட்பிலிக்ஸ்க்கு எந்த ஒரு கண்டன்டும் கொடுக்கவில்லையாம்.
மொத்தமாய் எல்லாத்தையும் சொல்லித்தான் அக்ரிமெண்ட் போட்டுள்ளனர். இதனால் பாதிக்கு பாதி விலையை குறைத்து லைக்காவிற்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது நெட்பிலிக்ஸ் நிறுவனம். மொத்தத்தில் இந்தியன் 2வை நம்பி அனைவரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.
- வாங்குன அடியில் படுத்தே விட்ட இந்தியன் 2 நான்காம் நாள் வசூல்
- நெகட்டிவ் விமர்சனங்களால் குறையும் இந்தியன் 2 வசூல்
- இந்தியன் 2 வசூல் 1500 கோடிப்பே