வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கமல், சித்தார்த்தால் தலையை பிச்சிக்கும் லைக்கா.. நீங்க வாய மூடிட்டு இருந்தாலே போட்ட காசை எடுத்துடலாம்

Indian 2: டெம்போ எல்லாம் வெச்சு கடத்தி இருக்கோம் கொஞ்சம் பார்த்து பண்ணுங்க. இதுதான் லைக்காவின் மைண்ட் வாய்ஸ் ஆக இருக்கும். ஏற்கனவே சொல்ல முடியாத அளவுக்கு பிரச்சனையில் இந்த நிறுவனம் தவித்துக் கொண்டிருக்கிறது.

இதில் கமல் வேறு தன் பங்குக்கு படுத்தி எடுக்கிறார். அவர் போதாது என்று சித்தார்த் வேறு ஆர்வக்கோளாறில் எதையாவது செய்து சோசியல் மீடியா கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி வருகிறார்.

அதாவது நீண்ட போராட்டத்திற்கு பிறகு இந்தியன் 2 நாளை திரைக்கு வருகிறது. அதற்கான பிரமோஷனில் லைக்கா கடந்த சில வாரங்களாகவே தீவிரமாக இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று கமல், சங்கர் உட்பட படகுழுவினர் அனைவரும் படத்தை பிரமோஷன் செய்து வருகின்றனர்.

ஆனால் அதுவே லைக்காவுக்கு தலைவலியாக மாறியுள்ளது. பொதுவாக கமல் சாதாரணமாக பேசினாலே எதுவும் புரியாது. அதிலும் இந்தியன் 2 ப்ரமோஷன் போது அவர் பேசும் பல விஷயங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாக வெளிப்படையாகவே பேசப்பட்டு வருகிறது.

உச்சகட்ட டென்ஷனில் லைக்கா

அவருக்கு அடுத்ததாக சித்தார்த்தின் பேச்சும் அப்படித்தான் இருக்கிறது. அதாவது இந்தியன் 2 பற்றி கேள்விகளை கேட்டால் கமல் இந்தியன் 3 பற்றிய தகவல்களை கொடுக்கிறார்.

உடனே சித்தார்த் முந்திரிக்கொட்டை போல இந்தியன் 4 தான் எனக்கு பிடிக்கும் என அளந்து விடுகிறார். இது கிட்டத்தட்ட எல்லாருக்குமே ஒரு குழப்பத்தை தான் கொடுக்கிறது. ஆக மொத்தம் யாருமே இந்தியன் 2 படத்தை பற்றி ப்ரமோஷன் செய்யவில்லை.

இப்படி நடிகர்களின் போக்கால் தலையை பிச்சிக்கும் லைக்கா தயவு செஞ்சு பேசாம இருங்க. நீங்க எல்லாம் வாய மூடிக்கிட்டு இருந்தாலே நான் போட்ட காசை எடுத்துடுவேன் என கதறி வருகிறார்கள்.

ஏனென்றால் பட தயாரிப்பு செலவு பத்தாதுன்னு பிரமோஷனுக்கும் அவர்கள் காசை வாரி இறைத்துள்ளனர். ஆனால் அந்தப் பதட்டம் சங்கர் தவிர வேறு யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை. ஆண்டவருக்கு இந்தியன் 2 மீது அப்படி என்னதான் வெறுப்போ கடவுளுக்கே வெளிச்சம்.

தடைகளை தாண்டி திரைக்கு வரும் இந்தியன் 2

Trending News