வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய்யை பகைத்துக் கொண்ட லைக்கா.. 9 வருட பகையை முடிவுக்கு கொண்டு வந்த சுபாஸ்கரன் 

Lyca Production: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று லைக்கா ப்ரொடக்ஷன்ஸ். இந்த நிறுவனம் டாப் நடிகர்களின் படங்களை பல கோடி செலவில் தயாரித்து அதிக லாபம் பார்த்து வருகிறது. இந்த நிலையில் லைக்கா நிறுவனம் விஜய்யை பகைத்துக் கொண்டதாகவும்,  அந்த பகை 9 வருடங்களாக நீடிப்பதாகவும் தெரியவந்துள்ளது.

தற்சமயம் சோசியல் மீடியாவில் எங்கு பார்த்தாலும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயை பற்றிய பேச்சுத்தான். இவருக்கு சினிமாவில் ஆர்வம் இருப்பதை அறிந்த விஜய், அது தொடர்பான படிப்பை  படிக்க வைப்பதற்காக வெளிநாட்டிற்கு அனுப்பினார். படித்து முடித்ததும் விஜய் போலவே ஹீரோவாக தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

Also Read: இயக்குனர் ஆகி அப்பாவுக்கே ஷாக் கொடுத்த ஜேசன் சஞ்சய்.. ஆனாலும் விஜய் ரொம்ப ஸ்ட்ரிக்ட் போல

ஆனால் இப்போது அவருடைய தாத்தா எஸ்ஏ சந்திரசேகர் போல் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தை லைக்கா தயாரிக்கிறது  இந்த விஷயம் விஜய்க்கு தெரியாதாம். தன்னிச்சையாக தன் முயற்சியினால் லைக்காவிடம் கதை சொல்லி  சாதித்துள்ளார் விஜய் மகன் சஞ்சய்.

கிட்டத்தட்ட 9 வருடங்களாக லைக்காவிற்கு விஜய் கால் சீட் கொடுக்கவில்லை. விஜய் நடிப்பில் லைக்கா நிறுவனம் தயாரித்த கத்தி திரைப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியானது. விவசாயத்தைப் பற்றி வலுவாக பேசிய இந்த படம் வசூல் ரீதியாக சோடை போனாலும், விமர்சன வாயிலாக நல்ல வரவேற்பு கிடைத்தது.

Also Read: தளபதி-68 ல் ஜோதிகா வாய்ப்பை தட்டி பறித்த ஆன்ட்டி நடிகை.. ஓவர் அல்சாட்டியும் பண்ணதால் வந்த விளைவு

கத்தி படத்திற்கு பின் இவர்கள் கூட்டணி போடவில்லை. கத்தி படம் வசூல் ரீதியாக லைக்காவிற்கு திருப்தி அளிக்கவில்லையாம். லைக்கா அதிருப்தியில் இருப்பது விஜய் காதுகளுக்கு சென்றுள்ளது. ஆனால் படம் விமர்சனம் ரீதியாக சூப்பர் ஹிட். ஆனால் லைக்கா வசூலாகவில்லையே என்ற அதிருப்தியில் இருந்தது. இதனால் தான் விஜய் அடுத்தடுத்து லைக்காவிற்கு கால்  சீட்டே கொடுக்கவில்லை.

இப்பொழுது ஒன்பது வருடத்திற்கு பின் விஜய் போனால் என்ன விஜய் மகனை வைத்து படம் இயக்குவோம் என லைக்கா தளபதி வாரிசை வைத்து இயக்கவிருக்கிறது. இதன் மூலம் விஜய் லைக்கா இருவரின் 9 வருட பகை முடிவுக்கு வந்தது என்றும் சொல்லப்படுகிறது.

Also Read: ரஜினி, விஜய் ரசிகர்களை குதூகல படுத்திய ஷாருக்கான்.. ஜவான் மேடையை தெறிக்க விட்ட சூப்பர் ஸ்டார்

Trending News