வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மீண்டும் சிக்கலில் தவிக்கும் விடாமுயற்சி.. எல்லா ரூட்டிலும் யோசித்து திக்கு முக்காடும் லைக்கா

Lyca: விடாமுயற்சி-ன்னு பெயர் வச்சாலும் வச்சாலும் வச்சாங்க பட குழு படத்த ஆரம்பிக்கிறதுக்கு இன்னும் விடாமுயற்சியோடு போராடிக் கொண்டுதான் இருக்காங்க. ஆனால் என்ன நடந்தாலும் லைக்கா படத்தை விடுவதாக இல்லை. தயாரிப்பு தரப்பு எல்லா ரூட்டிலும் யோசித்து படு வேகமாக காய் நகர்த்தி வருகிறது.

அமலாக்கத் துறையின் சோதனை காரணமாக லைக்காவின் ஒட்டுமொத்த பணமும் சிக்கலில் இருப்பது அனைவருக்கும் தெரியும். இதுதான் படம் ஆரம்பிக்கப்படாமல் இருப்பதற்கான முக்கிய காரணம். அதனாலேயே படத்திற்கு பைனான்ஸ் செய்யுமாறு மதுரை அன்புச் செழியனிடம் தயாரிப்பு தரப்பு கேட்டிருக்கிறது.

Also read: அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது ரொம்ப கஷ்டம்.. அவருடன் நடித்த நாட்களை மறக்க முடியாத ஹீரோயின்

ஆனால் அங்கும் முட்டுக்கட்டை தான் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அதாவது அன்புச் செழியன் சம்பந்தப்பட்ட இடங்களிலும் சில மாதங்களுக்கு முன்பு தான் ஐ டி ரெய்டு நடைபெற்றது. அதன் காரணமாகவே அவர் இப்போது பிளாக் மணி பைனான்ஸ் அனைத்தையும் ஓரம் கட்டி விட்டு ஒயிட் மணி மூலமாகவே பணம் கொடுக்கல் வாங்கல் செய்து வருகிறார்.

அந்த வகையில் லைக்கா நிறுவனத்திற்கும் அவர் இந்த முறையில் தான் பணம் கொடுக்க தயாராக இருக்கிறாராம். ஆனால் இப்படி ஒயிட் மணி மூலமாக பணம் கொடுக்க வேண்டும் என்றால் வங்கி பரிவர்த்தனை மூலமாகத்தான் செய்ய வேண்டும். அப்படி என்றால் அன்பு செழியன் கொடுக்கும் பணம் லைக்காவின் வங்கி கணக்கிற்கு தான் செல்லும்.

Also read: தாறுமாறாக சம்பளத்தை கேட்ட ஜெயம் ரவி பட இயக்குனர்.. இதுக்கு ஐடி ரைடே பரவாயில்லை தலை தெறிக்க ஓடிய லைக்கா

அப்படி இருக்கும் பட்சத்தில் இப்போது லைக்காவின் வங்கி கணக்கு அனைத்தும் அமலாக்க துறையினரால் முடக்கப்பட்டு இருக்கிறது. அதனால் படத்திற்கு பைனான்ஸ் எப்படி பெறுவது, வேறு என்ன வழி இருக்கிறது என எல்லா பக்கமும் இருந்தும் லைக்கா யோசித்து வருகிறதாம். ஆனால் அதற்கான வழி தான் இன்னும் கிடைத்த பாடில்லை. இவ்வாறு திரும்பும் பக்கம் எல்லாம் பிரச்சனை தொடர்ந்து கொண்டே வருவதால் தயாரிப்பு தரப்பு திக்குமுக்காடி போயிருக்கிறது.

இது அஜித் ரசிகர்களுக்கும் சோதனையாக அமைந்திருக்கிறது. அதனாலயே அஜித் படத்தை வேறு தயாரிப்பாளரிடம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் வைத்து வருகின்றனர். இருப்பினும் இந்த பிரச்சனையை சுமுகமாக முடித்து படத்தை தொடங்குவதில் லைக்கா முனைப்பு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Also read: அப்பா பைக் ரேஸ் போல ஆச்சரியப்படுத்திய அஜித்தின் மகன்.. வைரல் புகைப்படம்

Trending News