ஹாலிவுட் நிறுவனமான பெரமவுண்ட் பிக்சர்ஸ் 1997 இல் தயாரித்த படம் “பிரேக் டவுன்” இந்த படத்தோடு தழுவல் தான் விடாமுயற்சி என்கிறார்கள். அந்த நிறுவனத்திடம் முறையான அனுமதி பெறாமல் படத்தை எடுத்து விட்டார்கள்.
பெரமவுண்ட் நிறுவனம் இதற்கு நஷ்ட ஈடாக 100 கோடிகள் வரை வைகாவிடம் கேட்டு வருகிறது. இந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இது ஒரு புறம் இருக்க லைகா நிறைய இடத்திலிருந்து பைனான்ஸ் வாங்கியுள்ளது. இப்பொழுது அந்த நெருக்கடியும் சேர்ந்துள்ளது.
Pen Media: இந்த நிறுவனத்திடம் இருந்து சுமார் 50 கோடிகள் வாங்கியுள்ளது லைகா. இதில் பாதிக்கு மேல் அடைத்து விட்டாலும் இன்னும் 20 கோடி ரூபாய் மீதம் இருக்கிறதாம். இவர்களும் பணத்திற்காக நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.
கோகுலம் மூவிஸ்: கேரளாவில் பெரும் தயாரிப்பு நிறுவனமாக இருப்பவர்கள் கோகுலம் மூவிஸ் . இவர்கள் லைகா நிறுவனத்திற்கு 30 கோடிகள் கொடுத்திருக்கிறார்கள். வேட்டையன், இந்தியன் 2 போன்ற படங்களுக்கு பைனான்ஸ் கொடுத்து உதவியவர்கள் இவர்கள்தான்.
ரெட் ஜெயன்ட் மூவிஸ்: லைகா தரப்பிலிருந்து இவர்களுக்கு ஒரு பெரும் தொகையை கொடுக்க வேண்டியது உள்ளது. பெரமவுண்ட் பிரச்சனை முடிந்தால் கூட இந்த கடனை எல்லாம் அடைத்தால் தான் லைகா இதில் இருந்து தப்பிக்கும். அதன் பின்னர் தான் விடாமுயற்சி ரிலீஸ்.