சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

அதல பாதாளத்தில் கிடந்த லைக்கா.. பிரம்மாண்ட பட ரிலீஸுக்காக மணிரத்தினத்தின் வாரிசு செய்த சம்பவம்

Director Mani Ratnam: தமிழ் சினிமாவின் பெரிய பெரிய பட்ஜெட் படங்களை எல்லாம் எடுத்து சர்வ சாதாரணமாக 100 கோடி வசூலை தட்டி தூக்கக்கூடிய லைக்கா தயாரிப்பு நிறுவனம் ஒரு கட்டத்தில், பல பேர் செய்த மோசடியால் அதள பாதாளத்தில் செல்லும் அளவுக்கு அபாயகரமான நிலையில் இருந்தது.

அந்த சமயத்தில் தான் மணிரத்தினம் தனது கனவு திரைப்படம் ஆன பொன்னியின் செல்வம் படத்தை எடுத்துக் கொண்டிருந்தார். அந்த படம் எடுக்கும்போது கொஞ்சம் டவுன் டைமில் தான் இருந்தது லைக்கா. இந்தப் படத்தை மணிரத்தினமும் உடன் இணைந்து தயாரித்ததால் அவருடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் பணமில்லாமல் பெரிய கஷ்டத்தில் இருந்தது.

Also Read: தளபதியில் கிடைக்காத மவுசு மணிரத்தினம் படத்தில் கிடைத்தது.. ரசிகைகளை ஏங்க விட்ட சாக்லேட் பாய்

அந்த சமயத்தில் பொன்னியின் செல்வன் பட ரிலீஸுக்காக தூண் போல் நின்று உதவி புரிந்தவர் மணிரத்தினத்தின் மகன்தான். ஏனென்றால் படம் ரிலீஸ் செய்யும் தருவாயில் பொருளாதார நெருக்கடியில் இருந்த மணிரத்தினம் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தார். அந்த சமயத்தில் 500 கோடியை மணிரத்னத்திற்காக ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார் அவருடைய மகன் நந்தன்.

மணிரத்தினம் தன்னுடைய மகன் நந்தனுக்கு சினிமா வாசம் இருக்கக் கூடாது என அவரை வேறு ஒரு விதமாய் வளர்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் லண்டனில் உள்ள ஒரு தொழிலதிபரிடம் பேசி தந்தைக்காக 500 கோடி ரூபாய் கடன் வாங்கி கொடுத்து பொன்னியின் செல்வன் வெளிவர காரணமாய் இருந்துள்ளார்.

Also Read: ஹீரோவுக்கு பண வாசனை காட்டாத தந்தை.. மணிரத்னத்திற்கு நோ சொன்ன கோடீஸ்வர அப்பா

இரண்டு பாகங்களாக வெளியாகி ரசிகர்களிடம் நன்கு வரவேற்பை பெற்ற பொன்னியின் செல்வன் படத்திற்காக மணிரத்தினத்தின் மகன் மறைமுகமாக உதவி செய்வது இன்று வரை யாருக்கும் தெரியாது. ஆனால் இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கு முக்கிய காரணமாக நந்தன் இருந்தது தற்போது தெரியவந்துள்ளது

மேலும் தன்னுடைய தந்தைக்காக 500 கோடியை ஏற்பாடு செய்து கொடுத்து அவருடைய கனவு திரைப்படத்திற்கு எந்த பாதிப்பும் வராமல் ரிலீஸ் செய்ய வைத்த மனதிருப்தியில் தற்போது நந்தன் இருக்கிறார். புலி 16 அடி பாய்ந்தால், குட்டிப்புலி 32 அடி பாய்கிறதே என கோலிவுட்டே தற்போது நந்தனை பாராட்டுகிறது.

Also Read: ஓவர் ஆக்டிங் செய்த நடிகை.. மூஞ்சில் ஊற்றிய சாசை அப்படியே நக்கிடு என கூறிய கே பாலச்சந்தர்

Trending News